என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐசிசி-யின் ஒருநாள் தரவரிசையில் முதல் இடம் பிடித்த இலங்கை வீரர்
    X

    ஐசிசி-யின் ஒருநாள் தரவரிசையில் முதல் இடம் பிடித்த இலங்கை வீரர்

    • ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்தில் உள்ளார்.
    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களில் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 3-வது இடத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் 10-வது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்-ம் உள்ளனர்.

    நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    Next Story
    ×