search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அடுத்த இன்னிங்ஸ்-க்கு ரெடி.. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்த பாகிஸ்தான் வீரர்..!
    X

    அடுத்த இன்னிங்ஸ்-க்கு ரெடி.. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்த பாகிஸ்தான் வீரர்..!

    • சர்வதேச கிரிக்கெட்டில் இவர் 237 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
    • இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இவர் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். எனினும், உலகம் முழுக்க பிரான்சைஸ் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

    38 வயதான இடது கை பந்துவீச்சாளரான வாஹப் ரியாஸ் கடைசியாக 2020 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கினார். இவர் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 27 டெஸ்ட் போட்டிகள், 91 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் சுமார் 237 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார்.

    2008-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் பாகிஸ்தான் அணியில் வாஹப் அறிமுகமானார். 2011 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வாஹப் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதே போன்று 2015 உலக கோப்பை தொடரின் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

    முன்னதாக 2019 வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வாஹப், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வாஹப் அறிவித்து இருக்கிறார்.

    "சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கி விளையாடியது பெருமைக்குரிய விஷயம் ஆகும். இந்த பயணத்திற்கு முடிவு சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உணர்கிறான். புதிய பயணத்தை துவங்கும் வகையில் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாட இருப்பதில் ஆவலோடு இருக்கிறேன். இதன் மூலம் தொடர்ந்து உலகளவில் சிறந்த வீரர்களுடன் விளையாடி ரசிகர்களை மகிழ்விப்பேன்," என்று வாஹப் ரியாஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×