மாலிவுட்டின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது ரேகாசித்திரம்

ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.
மாலிவுட்டின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது ரேகாசித்திரம்
Published on

ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும். திரைப்படம் இதுவரை உலகளவில் 75கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படமே 2025 ஆம் ஆண்டில் வெளியான மலையாளம் திரைப்படங்களில் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது ஆகும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com