search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பையில் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார்: ஜெப் தாம்சன் சொல்கிறார்
    X

    உலகக்கோப்பையில் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார்: ஜெப் தாம்சன் சொல்கிறார்

    இங்கிலாந்து உலகக்கோப்பையில் இந்தியாவின் முன்னணி வீரரான பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஜெப் தாம்சன் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை தொடர் குறித்து நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெப் தாம்சன் கூறியதாவது:-

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அவர் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் தனது வேகத்தின் மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கிறார்.

    மேலும் விதவிதமான பந்துவீச்சை மாற்றி வீசுகிறார். அவரது பந்துவீசும் முறை கணிக்க முடியாத அளவில் உள்ளது. பும்ராவின் பந்துவீச்சை எந்த பேட்ஸ்மேனும் சரியாக கவனித்தனர் என்று நான் பார்க்கவில்லை.

    பும்ராவுடன் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவும் கவனிக்கப்படக் கூடியவர். அவரும் சிறப்பான நிலையில் உள்ளார்.



    அதேபோல் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் பார்மில் இல்லாவிட்டாலும் அவர் அதில் இருந்து மீண்டு சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    அவர் மட்டும் நன்றாக பந்துவீச ஆரம்பித்துவிட்டால் அவர்தான் உலகிலேயே மற்றவர்களைவிட சிறந்த பந்து வீச்சாளராக இருப்பார். அதற்கு அவர் வேகத்தை கூட்ட வேண்டும். அதேவேளையில் சரியான அளவிலும் பந்துவீச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×