search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "India Squad"

  • டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்தது.
  • டெத் ஓவரில் நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்வார்.

  புதுடெல்லி:

  ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

  இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

  டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

  இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நடராஜன் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது.

  பந்துவீச்சில் இடம் பெற்றுள்ள அர்ஷதீப் சிங் அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக நடராஜனை தேர்வு செய்திருக்கலாம் என தங்கள் ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

  நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டியில் அவர் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக பாண்டியா நியமனம்.
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

  புதுடெல்லி:

  ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

  டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக நேற்று அறிவித்தது.

  இதில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மாவும், பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  மேலும், சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், கேப்டனாக இல்லாவிட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்ட முதல் ஆளாக ரோகித் சர்மா இருந்திருப்பார் என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.
  • இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை.

  புதுடெல்லி:

  இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

  ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.

  இதற்கிடையே, 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. 4-வது டெஸ்ட் ராஞ்சியில் 23-ம் தேதியும், கடைசி டெஸ்ட் மார்ச் 7-ம் தேதியும் தொடங்குகிறது.

  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டி ருந்தது. இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி விலகி இருந்தார்.

  இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் இடம்பெறவில்லை.

  காயம் காரணமாக 2-வது டெஸ்டில் விளையாடாத பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். அதே வேளையில் இருவரும் போட்டியில் விளையாடுவது குறித்து மருத்துவ குழுவின் உடற்தகுதி அறிக்கை அடிப்படையில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

  வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி விவரம் வருமாறு:-

  ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கே.எஸ்.பரத், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

  உலகக்கோப்பைக்கான காம்பினேசன், 4-வது இடத்திற்கு யார்? உள்பட பல்வேறு சந்தேகங்களுக்கு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
  உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாடும் திறமை பெற்றவர்கள். நாங்கள் ஒரு பிளெக்சிபில் அணி. இந்தியா பந்ததையத்திற்கான குதிரை. பந்தயத்தில் வெல்வதற்கான போதுமான ஆயுதங்களை பெற்றுள்ளோம். நம்பர் 4-ல் களம் இறங்கி விளையாட போதுமான வீரர்களை பெற்றுள்ளோம். ஆகவே, நாங்கள் அதைப்பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை.

  நாங்கள் அனைத்து பகுதிகளிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) ஆதிக்கம் செலுத்தும் வகையிலான அணியை பெற்றுள்ளோம். தொடருக்கு பயணம் செய்ய வேண்டும், தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேரும் அதில் இருக்க வேண்டும் என்பதுதான் கடைசி கட்ட எண்ணமாக இருக்கிறது.  வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் மிகவும் மோசமான அளவிற்கு காயம் அடைந்தால், மாற்று வீரரை தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம்.

  நாங்கள் 22-ந்தேதிதான் இங்கிலாந்து புறப்பட இருக்கிறோம். அதில் 15 பேரும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதிர்ஷ்டவசமாக கேதர் ஜாதவுக்கு எழும்பு முறிவு ஏற்படவில்லை. ஆகவே, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். போதுமான காலஅவகாசம் இருக்கிறது’’ என்றார்.
  இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND @RishabPant777
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர்  ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது.

  இந்நிலையில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் டெஸ்டின்போது யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடையாத  முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  சகா காயத்தில் இருந்து மீளாததால் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.

  18 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே (துணைக் கேப்டன்), 3. தவான், 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. முரளி விஜய், 7. கருண் நாயர், 8. தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 9. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 10. அஸ்வின், 11. ஜடேஜா, 12. குல்தீப் யாதவ. 13. ஹர்திக் பாண்டியா. 14. மொகமது ஷமி, 15. இசாந்த் சர்மா, 16. உமேஷ் யாதவ், 17. பும்ரா, 18. சர்துல் தாகூர்.
  ×