என் மலர்

  நீங்கள் தேடியது "IPL 2019"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அன்பால் நெகிழ வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் தோல்வியடைந்தது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி வரை முயற்சித்த வாட்சன் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.

  இந்நிலையில் ஐபிஎல் இறுதி போட்டி முடிந்த பின், வாட்சன் பற்றிய ஒரு புகைப்படம் சமூக வளைதளங்களில் பரவியது. அந்த புகைப்படத்தில் வாட்சன் ரத்த காயங்களுடன் ஆடியது தெரிய வந்தது. இதனை அனைவரும் முதலில் பொய்யான செய்தி என கிண்டல் செய்தனர். அதன் பிறகு போட்டியின் ஹைலைட்சை பார்த்து அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.  இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட அணியின் வெற்றிக்காக விளையாடிய வாட்சனுக்கு சில தினங்களாக ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக வாட்சன் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார்.

  அந்த வீடியோவில் வாட்சன் கூறியதாவது:-

  கடந்த 2 நாட்களாக ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி வரை முயன்று 1 ரன்னில்தான் தோல்வியடைந்தோம். ஆனாலும் மிகவும் சிறப்பான ஆட்டமாகும்.

  அடுத்த வருடம் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் விசில் போடு.

  இவ்வாறு வீடியோவில் கூறியிருந்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானுக்கு எதிராக 93 பந்தில் 128 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது என பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.
  இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் முதன்முறையாக இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார். 10 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து அசத்தினார். சராசரி 55.62 ஆகும். ஆர்சிபி-க்கு எதிராக சதம் விளாசினார்.

  தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

  பேர்ஸ்டோவ் 93 பந்தில் 128 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் மாறுபட்ட பயிற்சியாளர்கள், மாறுபட்ட வீரர்களிடம் இருந்து பல்வேறு மாறுபட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதில் சிறிய அளவில் போட்டியின் திட்டங்களும் இருக்கும்.

  டேவிட் வார்னர் முற்றிலும் மாறுபட்ட பகுதிகளில் பந்தை விரட்டக்கூடியவர். இது வேறெங்கும் இல்லாத முறை. இதில் இருந்து வார்னர் போன்ற வீரர்கள் இருக்கும்போது, நெருக்கடியான நிலையில் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதை கற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
  கொல்கத்தா:

  12-வது ஐ.பி.எல். போட்டி தொடரில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஆட்டத்தில் 5 வெற்றி, 8 தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. 11 புள்ளிகளுடன் அந்த அணி கடைசி இடத்தை பிடித்தது.

  ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலியின் கேப்டன் ஷிப்பை முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் விமர்சனம் செய்திருந்தார்.

  ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத விராட்கோலி, கேப்டனாக நீடிப்பதற்கு அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.

  இதற்கிடையே இந்த முறையும் பெங்களூர் அணி சாதிக்க தவறியது. தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.

  ஆனால் ஐ.பி.எல்.லில் விராட்கோலியின் கேப்டன் ஷிப் உலக கோப்பை போட்டியில் எதிரொலிக்கும் என்று கருத்து நிலவுகிறது.

  இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

  விராட்கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன் ஷிப்பை இந்திய அணி விளையாடும் போட்டிகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணிக்காக கோலியின் கேப்டன்ஷிப் மிக நன்றாக உள்ளது.

  ரோகித்சர்மா துணை கேப்டனாக உள்ளார். அணியில் டோனி இருக்கிறார். ஆகையால் அவர் நல்ல ஆதரவு பெற்று இருக்கிறார். உலக கோப்பை போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்களிப்பு அளிப்பார். அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கான வாய்ப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்.

  உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும். இங்கிலாந்தில் நடக்கும் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபியை வென்றனர். 2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றனர்.

  இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. உலக கோப்பை போட்டிகளில் விளையாடும் போது இந்தியா அணி எப்போதுமே வாய்ப்பில் இருக்கும். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி உள்ளதால் நெருக்கடி இருக்கும். ஆனால் அதுவே இந்திய வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் காலில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
  ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பையிடம் தோற்று கோப்பையை இழந்தது.

  சென்னை அணி தோற்றாலும் வாட்சன் கடைசி வரை தனி ஒருவராக போராடி சி.எஸ்.கே. ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அவர் 59 பந்தில் 80 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். சமூக வலைதளங்களில் அவரது ஆட்டத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

  இந்த நிலையில் காலில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியது தெரிய வந்தது. இதை வாட்சன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.


  அதில் வாட்சனின் கால் பகுதியில் மிகப்பெரிய அளவிலான ரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஹர்பஜன் கூறியதாவது:-

  வாட்சன் ரன் எடுக்க ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை ஆடினார். போட்டிக்கு பிறகு காலில் ஏற்பட்ட காயத்துக்கு 6 தையல் போடப்பட்டது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து சி.எஸ்.கே. ரசிகர்கள் வாட்சனை மீண்டும் ஒருமுறை பாராட்டி உள்ளனர். வாட்சனின் அர்ப்பணிப்பு நமக்கு கிடைத்த மகுடம் என்று சொல்லி சூப்பர் கிங் அணியும் பாராட்டி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் கேப்டன் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
  12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

  முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் (நாட்-அவுட்) 41 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 29 ரன்னும், இஷான் கிஷன் 23 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் கேப்டன் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

  இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர்கள் குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை டோனி தனது கேட்ச் மூலம் ஆட்டம் இழக்க வைத்தார். 190 ஐ.பி.எல். ஆட்டங்களில் விளையாடி இருக்கும் டோனி இதுவரை 132 விக்கெட்டுகளை (94 கேட்ச், 38 ஸ்டம்பிங்) வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.

  இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 182 ஆட்டங்களில் 131 விக்கெட்டுகள் (101 கேட்ச், 30 ஸ்டம்பிங்) விழ காரணமாக இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டோனி தகர்த்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிராவோ வீசிய கடைசி ஓவரில் ‘வைடு’ கொடுக்காததால் நடுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த பொல்லார்டுக்கு 23 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் என்று கணிக்கப்பட்டதால் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் ரன் குவிக்க திணறியது. அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்டு கடைசி வரை நின்று ஸ்கோரை முடிந்த அளவிற்கு உயர்த்தினார். 19 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

  கடைசி ஓவரை வெயின் பிராவோ வீசினார். முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 2-வது பந்தை வலது பக்கம் வைடாக வீசினார். பொல்லார்டு பேட்டை சுழற்றினார். ஆனால் பேட் பந்தில் படவில்லை. பொல்லார்டு பேட்டை சுழற்றாமல் இருந்திருந்தால் அந்த பந்து வைடாக கருதப்பட்டிருக்கும்.

  3-வது பந்தையும் அதேபோல் பிராவோ வீசினார். இந்த முறை பொல்லார்டு பேட்டை சுழற்றவில்லை. பந்து வைடாக சென்றது. ஆனால், நடுவர் ‘வைடு’ கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பொல்லார்டு கடுங்கோபம் அடைந்தார். தனது பேட்டை மேல்நோக்கி வீசினார்.

  பின்னர் அடுத்த பந்தை பிராவோ வீச ஓடிவந்தார். பொல்லார்டு வலது பக்கம் நடந்து சென்றார். இதனால் பிராவோ பந்து வீசுவதை நிறுத்தினார். இரண்டு நடுவர்களுகம் பொல்லார்டு அருகில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் கடைசி இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 25 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  பொல்லார்டு மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது வழக்கம். ஆனால், யாரிடமும் பெரிய அளவில் வாக்குவாதம்  செய்யப்பட்டார். அவருக்கான ஸ்டைலில் எதிர்ப்பு தெரிவிப்பார். ஒருமுறை மைதானத்தில் அதிகமாக பேசக்கூடாது என நடுவர் எச்சரிக்க, வாயை டேப் வைத்து ஒட்டுக்கொண்டு விளையாடினார். நேற்றைய போட்டியில் பேட்டை வீசிய விதிமுறைக்கு மாறான என, ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனி கீப்பிங்கில் சாதனை படைத்துள்ளார்.
  கேப்டன் பதவி மற்றும் பேட்டிங்கில் ஜொலித்த டோனி. ஐ.பி.எல். போட்டியில் விக்கெட் கீப்பிங்கிலும் சாதித்து உள்ளார்.

  நேற்றைய இறுதிப்போட்டியில் அவர் 2 கேட்ச்களை (குயின்டன் டிகாக், ரோகித் சர்மா) பிடித்தார். ஐ.பி.எல். போட்டியில் அவர் 136 வீரர்களை அவுட் செய்ய காரணமாக திகழ்ந்தார். இதன் மூலம் டோனி புதிய சாதனை படைத்தார்.

  ஐ.பி.எல் போட்டியில் அதிகமான வீரர்களை அவுட் செய்ய காரணமாக இருந்த விக்கெட் கீப்பரில் முதல் இடத்தை பிடித்தார். அவர் தினேஷ் கார்த்திக்கை முந்தினார்.  டோனி 190 ஆட்டத்தில் 94 கேட்ச் பிடித்துள்ளார். 38 ஸ்டம்பிங் செய்துள்ளார். மொத்தம் 132 வீரர்களை ‘அவுட்’ செய்ய காரணமாக இருந்தார். தினேஷ்கார்த்திக் 131 வீரர்களை (101 கேட்ச்+ 30 ஸ்டம்பிங்) அவுட் செய்ய காரணமாக திகழ்ந்தார்.

  ஐ.பி.எல். போட்டியில் 100 வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன், 200 சிக்சர்களை அடித்த ஒரே இந்தியர் என்ற சாதனையிலும் டோனி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு குட்டி ரசிகர் அளித்த சாபம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
  ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

  வெற்றி பெற்ற மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னை அணிக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

  நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட் குழப்பத்தை ஏற்படுத்தியது.  அதிலும் மூன்றாவது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என்று ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  இந்நிலையில் டோனி அவுட் குறித்து 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுது கொண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  அதில் அச்சிறுவன் டோனி அவுட்டே இல்லை என்றும் சும்மானா அவுட்டுன்னு கொடுக்கறான். மூனாவது அம்பயர் தூக்கு மாட்டி செத்துடுவான் என்றும் அழுது கொண்டே கூறும் போது அச்சிறுவன் தாய் சமாதானப்படுத்துகிறார்.

  வீடியோவை காண..,

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் 2019 கோப்பையை மும்பை அணி கைப்பற்றிய நிலையில் இந்த சீசனில் பதிவான சாதனைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

  ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தட்டி சென்றது. 2-வது இடத்தை பிடித்த சென்னை அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பதிவான சாதனை துளிகள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

  இந்த ஐபிஎல் சீசனில் மொத்த ஆட்டம் - 60
  சிக்சர்கள் - 785
  பவுண்டரிகள் - 1651
  விக்கெட்டுகள் - 682
  ரன்கள் - 19416
  சதங்கள் - 6
  அரை சதம் - 106
  அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் டெல்லி அணியை சேர்ந்த ஷிகர் தவான் - 64
  அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் கொல்கத்தா அணியை சேர்ந்த ரஸல் - 52
  அதிக பவுண்டரிகள் அடித்த அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் - 236
  அதிக சிக்சர்கள் விளாசிய அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 143
  ஒரு அணியின் அதிக பட்ச ஸ்கோர் 232/2 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  ஒரு அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் 70 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
  ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

  மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில்  டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது.

  டி காக் விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கையில், சர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா எம்எஸ் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 45 ரன்களாக இருந்தது.  3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். தொடக்க ஜோடி ஆட்டமிழந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. அந்த அணி 7 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

  மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், இஷான் கிஷன் 23 ரன்னிலும், குருணால் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 14.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.  3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன் ஜோடி 36 பந்தில் 37 ரன்களே எடுத்தது.

  6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அப்போது 14.4 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

  பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை.  கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.  பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo