search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘வைடு’ கொடுக்காத நடுவருக்கு தனது பாணியில் எதிர்ப்பு தெரிவித்த பொல்லார்டு: இறுதியில் 23 சதவீதம் அபராதம்
    X

    ‘வைடு’ கொடுக்காத நடுவருக்கு தனது பாணியில் எதிர்ப்பு தெரிவித்த பொல்லார்டு: இறுதியில் 23 சதவீதம் அபராதம்

    பிராவோ வீசிய கடைசி ஓவரில் ‘வைடு’ கொடுக்காததால் நடுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த பொல்லார்டுக்கு 23 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் என்று கணிக்கப்பட்டதால் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் ரன் குவிக்க திணறியது. அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்டு கடைசி வரை நின்று ஸ்கோரை முடிந்த அளவிற்கு உயர்த்தினார். 19 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை வெயின் பிராவோ வீசினார். முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 2-வது பந்தை வலது பக்கம் வைடாக வீசினார். பொல்லார்டு பேட்டை சுழற்றினார். ஆனால் பேட் பந்தில் படவில்லை. பொல்லார்டு பேட்டை சுழற்றாமல் இருந்திருந்தால் அந்த பந்து வைடாக கருதப்பட்டிருக்கும்.

    3-வது பந்தையும் அதேபோல் பிராவோ வீசினார். இந்த முறை பொல்லார்டு பேட்டை சுழற்றவில்லை. பந்து வைடாக சென்றது. ஆனால், நடுவர் ‘வைடு’ கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பொல்லார்டு கடுங்கோபம் அடைந்தார். தனது பேட்டை மேல்நோக்கி வீசினார்.

    பின்னர் அடுத்த பந்தை பிராவோ வீச ஓடிவந்தார். பொல்லார்டு வலது பக்கம் நடந்து சென்றார். இதனால் பிராவோ பந்து வீசுவதை நிறுத்தினார். இரண்டு நடுவர்களுகம் பொல்லார்டு அருகில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் கடைசி இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 25 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.



    பொல்லார்டு மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது வழக்கம். ஆனால், யாரிடமும் பெரிய அளவில் வாக்குவாதம்  செய்யப்பட்டார். அவருக்கான ஸ்டைலில் எதிர்ப்பு தெரிவிப்பார். ஒருமுறை மைதானத்தில் அதிகமாக பேசக்கூடாது என நடுவர் எச்சரிக்க, வாயை டேப் வைத்து ஒட்டுக்கொண்டு விளையாடினார். நேற்றைய போட்டியில் பேட்டை வீசிய விதிமுறைக்கு மாறான என, ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
    Next Story
    ×