என் மலர்

  நீங்கள் தேடியது "Bairstow"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடிய ரிச்சர்ட் க்ளீசன் தொடர்ந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.
  • பென் ஸ்டோக்ஸ்-க்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

  இங்கிலாந்து தற்போது இந்தியாவுடனான தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. நாளை இந்தியாவுடனான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடரை வெல்ல இங்கிலாந்து அணி கடுமையாக போராடும்.

  இந்தியாவுடானான தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

  இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் தனது புனித யாத்திரை இடைவேளைக்குப் பிறகு அணியில் இணைய உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் இவர் இடம் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இடம் பெறாத பேர்ஸ்டோவ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார்.

  இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடிய ரிச்சர்ட் க்ளீசன் தொடர்ந்து அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான பென் ஸ்டோக்ஸ்-க்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

  ஒருநாள் அணி:

  ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோ, பிரைடன் கார்ஸ், சாம் கரன், லிவிங்ஸ்டன், கிரேக் ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி.

  டி20 அணி:

  ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆடில் ரஷித், ஜேசன் ராய், பில் சால்ட், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் சதமடித்தார்.
  • இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் நியூசிலாந்து அணியின் மிட்செல் சதமடித்தார்.

  லீட்ஸ்:

  நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

  இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் லீட்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

  அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். பிளெண்டல் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் சவுத்தி அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்தார்.

  இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 5 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

  இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் மிரட்டலான பந்து வீச்சில் இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள் அவுட்டாகினர்.

  ஒரு கட்டத்தில் 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.

  அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், ஓவர்டோன் ஜோடி பொறுப்புடன் ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. பேர்ஸ்டோவ் சதமடித்தார். ஓவர்டோன் அரை சதமடித்தார்.

  இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 130 ரன்னுடனும், ஓவர்டோன் 89 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

  நியூசிலாந்து சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், வாகர் 2 விக்கெட்டும், சவுத்தி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானுக்கு எதிராக 93 பந்தில் 128 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது என பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.
  இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் முதன்முறையாக இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார். 10 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து அசத்தினார். சராசரி 55.62 ஆகும். ஆர்சிபி-க்கு எதிராக சதம் விளாசினார்.

  தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

  பேர்ஸ்டோவ் 93 பந்தில் 128 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் மாறுபட்ட பயிற்சியாளர்கள், மாறுபட்ட வீரர்களிடம் இருந்து பல்வேறு மாறுபட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதில் சிறிய அளவில் போட்டியின் திட்டங்களும் இருக்கும்.

  டேவிட் வார்னர் முற்றிலும் மாறுபட்ட பகுதிகளில் பந்தை விரட்டக்கூடியவர். இது வேறெங்கும் இல்லாத முறை. இதில் இருந்து வார்னர் போன்ற வீரர்கள் இருக்கும்போது, நெருக்கடியான நிலையில் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதை கற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இடது கைவிரல் முறிந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பராக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.

  டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டின் போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டது (ஆண்டர்சன் வீசிய பந்தை பிடிக்க முயன்றபோது இடது கை நடுவிரலை பந்து பலமாக தாக்கியது). பின்னர் மருத்துவ பரிசோதனையில் விரலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

  3-வது டெஸ்டிற்கும் 4-வது டெஸ்டிற்கும் இடையில் சுமார் 10 நாட்கள் இடைவெளி இருந்ததால் அவரது காயம் குணமடைந்து அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஆனால், காயம் முழுமையாக குணமடைந்தால்தான் அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். இல்லையெனில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நான் விக்கெட் கீப்பர் பணியை செய்ய ஆர்வமாக இருக்கிறேன் என்று பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். அத்துடன், ‘‘விக்கெட் கீப்பர் பணியை நான் நேசிக்கிறேன். கடந்த 40 டெஸ்ட் போட்டிகளில் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன்’’ குறிப்பிட்டுள்ளார். பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பர் பணியை செய்யவில்லை என்றால் பட்லர் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். #ENGvAUS
  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

  இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான், கிரேக் ஓவர்டன் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே காயம் ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயம் அடைந்திருக்கும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளர்.  20 வயதாகும் சாம் குர்ரான் இங்கிலாந்து அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். கிரேக் ஓவர்டன் 3 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இருவரும் இதுவரை விளையாடியது கிடையாது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியா 242 ரன்னில் படுதோல்வியடைந்தது வார்னே, மைக்கேல் கிளார்க்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ENGvAUS
  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பேர்ஸ்டோவ் (92 பந்தில் 139), அலெக்ஸ் ஹேல்ஸ் (92 பந்தில் 147), மோர்கன் (30 பந்தில் 67), ஜேசன் ராய் (61 பந்தில் 82) ஆகியோரின் அதிரடியால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது.

  பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 37 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 239 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 51 ரன்னும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 44 ரன்களும் அடித்தனர். மொயீன் அலி (3), அடில் ரஷித்தின் சுழலில் சிக்கி 242 ரன்னில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்ததால் முன்னாள் ஜாம்பவான்கள் ஷேன் வார்னே, மைக்கேல் கிளார்க் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  அவர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
  ×