search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Buttler"

    • ஒருநாள் போட்டிகளில் முதல் மூன்று அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக இங்கிலாந்து திகழ்ந்து வருகிறது.
    • ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் பட்லர் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்தது.

    499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த போட்டியில் 162 ரன்கள் குவித்த பட்லர் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

    நெதர்லாந்து அணிக்கு எதிராக 498 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில், முதல் மூன்று அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக இங்கிலாந்து திகழ்ந்து வருகிறது.

    அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியல்



    ஒரு போட்டியில் 3 வீரர்கள் சதம் அடிப்பது இது 3-வது முறை ஆகும். ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே ஒரு இன்னிங்ஸில் மூன்று சதங்கள் அடிக்கப்பட்டன. இருமுறையும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான் அடித்தார்கள். 2015-ல் ஜோகன்னஸ்பர்க்கில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும், அதே ஆண்டு வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் மூன்று சதங்கள் அடித்திருந்தன. இந்நிலையில் ஒரு இன்னிங்சில் 3 சதங்கள் அடிக்கப்பட்ட அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி 2-வது இடத்தை பிடித்தது.

    அதிக முறை 400- ரன்களுக்கு மேல் குவிந்த அணியின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (6 முறை) அணி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் (5 முறை) உள்ளது.

    இங்கிலாந்து இன்னிங்சின் முதல் 35 ஓவர்களில், 9 சிக்ஸர்கள் மற்றும் 22 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன. 36-50 ஓவர்களில், இங்கிலாந்து 17 சிக்ஸர்களை அடித்தது. இதில் பட்லர் (10) லிவிங்ஸ்டன் (1) மலான் (1) சிக்சர்களும் அடித்தனர். ஒட்டுமொத்தமாக 26 சிக்சர்களை இங்கிலாந்து அணி அடித்தது. இது ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்சராகும். இந்த பட்டியலிலும் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்து ஆக்கிரமித்துள்ளது.

    ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த அணி பட்டியல்



    மொத்தமாக இங்கிலாந்து பவுண்டரிகள் (36 பவுண்டரிகள், 26 சிக்ஸர்கள்) மூலம் 300 ரன்களைக் குவித்தது. இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் பவுண்டரிகளில் மட்டும் 300+ ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையையும் இங்கிலாந்து அணி தட்டிச்சென்றது.

    பட்லர் சாதனைகள்

    இந்த போட்டியில் பட்லர் தனது சதத்தை வெறும் 47 பந்துகளில் எட்டினார். இது ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் அடித்த இரண்டாவது அதிவேக சதமாகும். இங்கிலாந்தின் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் பட்லர்தான் இருக்கிறார். அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் 50 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் மூன்று முறை சதம் அடித்த ஒரே வீரர் அவர்தான்.

    பட்லர்



    பட்லர் 65 பந்துகளில் 150 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் இருக்கிறார். 2015 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை அவர் (64 பந்துகளில்) படைத்தார்.

    இந்த போட்டியின் மூலம் லிவிங்ஸ்டனும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் லிவிங்ஸ்டன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் உள்ள ஏபி டிவில்லியர்ஸ் சாதனையை(16 பந்துகளில்) முடியடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் அதனை லிவிங்ஸ்டன் தவறவிட்டார். 13 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த அவர் 17-வது பந்தில்தான் அரை சதம் கடந்தார்.

    46-வது ஓவரில் லிவிங்ஸ்டன் 32 ரன்கள் குவித்தார். அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட்டது. ஒரு நாள் போட்டியில் ஒரே ஓவரில் இங்கிலாந்து எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். முன்னதாக 2007-ம் ஆண்டு தி ஓவல் மைதானத்தில் யுவராஜ் சிங்குக்கு எதிராக டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசினார்.

    பட்லர் ரன்அவுட் வி‌ஷயத்தில் அஸ்வின் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி கூறியுள்ளார். #IPL2019 #Ashwin #Buttler
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் ‘மன்கட்’ முறையில் அவுட் செய்தார்.

    பந்துவீசும் போது கிரீசை விட்டு வெளியே சென்றதால், பந்துவீசுவதை நிறுத்தி அவரை ‘ரன்அவுட்’ செய்தார்.

    அஸ்வினின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். தான் கிரிக்கெட் விதிகளின் படி தான் நடந்து கொண்டேன் என அஸ்வின் விளக்கம் அளித்தார். ஒன்று விதியை மாற்றுங்கள் அல்லது அதை சரி செய்யுங்கள் என்று அவர் காட்டமாக தெரிவித்தார்.

    அஸ்வின் ‘மன்கட்’ முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக வீரர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். வார்னே, வாகன், டீன் ஜோன்ஸ், பீட்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் அஸ்வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    கபில்தேவ், முரளி கார்த்திக் உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ), நிர்வாகிகள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது.

    இந்த வி‌ஷயத்தில் அஸ்வின் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய திறமைகளை தான் பந்துவீச்சாளர்கள் கையாள வேண்டும். அப்படி விளையாடினால் தான் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு முடிவு நன்றாக சென்றடையும் ஐ.சி.சி. விதிப்படி நடுவர் தீர்ப்பளித்து விட்டதால் பட்லர் சூழலை கருத்தில் கொண்டு சென்றுவிட்டார்.

    அஸ்வின் விதிகளையும், விளையாட்டின் ஆரோக்கியத்தையும் கண்டிப்பாக புரிந்து கொண்டு இரு வி‌ஷயங்களையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். மைதானத்தில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.

    ஒரு வீரர் மற்றவரை கிரிக்கெட் திறமையை வைத்து ஏமாற்றலாம். ஆனால் தனது போலியான திறமைகளை வைத்து ஏமாற்றக்கூடாது. ஒரு பேட்ஸ்மேன் கிரீசை விட்டு விலகி முன்னேறி சென்றால் அதை ஜென்டில்மேன் போல சரியான வழியில் அணுக வேண்டும்.

    போட்டி என்பது நல்லப்படியாக இருக்க வேண்டும். போட்டியில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2019 #Ashwin #Buttler
    ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்த விவகாரம் குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். #Ashwin #Buttler

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது,

    தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 47 பந்தில் 79 ரன்னும், (8 பவுண்டரி, 4 சிக்சர்), சர்பிராஸ்கான் 29 பந்தில் 46 ரன்னும் 16 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், குல்கர்னி, கவுதம் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பட்லர் 43 பந்தில் 69 ரன்னும் (10 பவுண்டரி, 2 சிக்சர்), சாம்சன் 25 பந்தில் 30 ரன்னும் எடுத்தனர். சாம்குர்ரான், முஜீப்-உர்- ரகுமான், ராஜ்பூத் தலா 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ஆட்டத்தின் 13-வது ஓவரில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜோஸ் பட்லரை பஞ்சாப் கேப்டனும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் ‘ரன் அவுட்’ செய்த விதம் சர்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அஸ்வின் பந்து வீசும் போது பட்லர் கிரீசை விட்டு வெளியே நகர்ந்தார். அப்போது அவரை ‘மன்கட்’ முறையில் ‘ரன்அவுட்’ செய்தார். ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே கிரீசை விட்டு வெளியே வந்தால் ‘ரன் அவுட்’ செய்யலாம் என்ற விதி இருக்கிறது.

    3-வது நடுவருக்கு கொண்டு செல்லப்பட்டு பட்லருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பட்லர், அஸ்வின் இடையே ஆடுகளத்தில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அஸ்வினின் இந்த செயல் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அவர் செய்தது தவறு. கிரிக்கெட்டை அசிங்கப்படுத்திவிட்டார் என்ற விமர்சனம் எழுந்தது.

    கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு, இது மாதிரியான செயல் கிரிக்கெட்டின் ஆரோக்கியத்துக்கு நல்ல தல்ல என்று சமூக வலை தளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று வார்னர் சுமித் பந்தில் தில்லுமுல்லு செய்ததற்கும் அஸ்வின் செயலுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.

    பட்லர் ஆட்டம் இழந்த பிறகு ராஜஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நான் விதிகளிப்படியே பட்லரை அவுட் செய்தேன். அதில் தவறு எதுவும்மில்லை என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கெட்டில் அது போன்ற நிகழ்வுகள் நடப்பது இயல்பானது, பட்லரை திட்டமிட்டு இந்தமுறையில் அவுட் செய்யவிலலை.

    நான் செய்த இந்த அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இது போன்ற அவுட்கள் முழுமையாக ஒரு போட்டியின் முடிவை தீர்மானிக்கும்.

    நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட் செய்யவில்லை. இதில் எங்கிருந்து கிரிக்கெட்டின் மதிப்பும், ஆரோக்கியமும் பாதிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. விதிப்படி விளையாடியது தவறு என்றால் விதியை மாற்ற வேண்டும் அல்லது அதை சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ahswin #Buttler

    இடது கைவிரல் முறிந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பராக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.

    டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டின் போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டது (ஆண்டர்சன் வீசிய பந்தை பிடிக்க முயன்றபோது இடது கை நடுவிரலை பந்து பலமாக தாக்கியது). பின்னர் மருத்துவ பரிசோதனையில் விரலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

    3-வது டெஸ்டிற்கும் 4-வது டெஸ்டிற்கும் இடையில் சுமார் 10 நாட்கள் இடைவெளி இருந்ததால் அவரது காயம் குணமடைந்து அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஆனால், காயம் முழுமையாக குணமடைந்தால்தான் அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். இல்லையெனில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் நான் விக்கெட் கீப்பர் பணியை செய்ய ஆர்வமாக இருக்கிறேன் என்று பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். அத்துடன், ‘‘விக்கெட் கீப்பர் பணியை நான் நேசிக்கிறேன். கடந்த 40 டெஸ்ட் போட்டிகளில் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன்’’ குறிப்பிட்டுள்ளார். பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பர் பணியை செய்யவில்லை என்றால் பட்லர் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.
    இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவனை தேர்வு செய்வதில் கடும் தலைவலி ஏற்படும் என பட்லர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்திருந்தார். 2-வது இன்னிங்சில் விராட் கோலி உள்பட முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    அதன்பின் பிரிஸ்டோல் அடிதடி வழக்க தொடர்பாக கோர்ட்டில் ஆஜரானதால் லார்ட்ஸ் டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக லார்ட்ஸ் டெஸ்டில் கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்தார். இவர் சதம் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் விராட் கோலியை வீழ்த்தி இந்தியா 107 ரன்னில் சுருள முக்கிய காரணமாக இருந்தார்.



    பிரிஸ்டோல் அடிதடி தகராறில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி அல்ல என்று கோர்ட் விடுவித்துள்ளது. இதனால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார்.



    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து 1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. பட்லர், 6. பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), 7. கிறிஸ் வோக்ஸ், 8. சாம் குர்ரான், 9. அடில் ரஷித், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    தற்போது பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியதால் ஆடும் லெவனில் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டால் கிறிஸ் வோக்ஸ்தான் வழக்கப்படி நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் சாம் குர்ரான் நீக்கப்பட வேண்டும். இவர் முதல் டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லார்ட்ஸ் டெஸ்டிவ் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதனால் இங்கிலாந்து இருவரில் ஒருவரை நீக்க யோசிக்கும்.



    அப்படி என்றால் ஜோஸ் பட்லர், போப், அடில் ரஷித் ஆகியோர்தான் லிஸ்டில் உள்ளனர். அடில் ரஷித் சுழற்பந்து வீச்சாளர். சுழற்பந்து வீச்சாளர் வேண்டாம் என்றால்தான் அடில் ரஷித் நீக்கப்படுவார். இல்லை எனில் பட்லர், போப் ஆகிய பேட்ஸ்மேன்களில் ஒருவர்தான் நீக்கப்பட வேண்டும்.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு ஆடும் லெவனை தேர்வு செய்வதில் பெரும் தலைவலி காத்திருக்கிறது. ஜோஸ் பட்லரும் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
    பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து தேசிய அணிக்குச் செல்வதால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. #IPL2018 #RR #Buttler
    ஐபிஎல் 11-வது சீசன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளைத் தவிர மற்ற அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறவில்லை. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

    இதனால் 13 ஆட்டங்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மே 19-ந்தேதி எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது.



    முக்கியமான ஆட்டத்திற்கு தயாராகும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வந்த செய்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை திரும்ப அழைக்கிறோம் என்று கூறியுள்ளது.



    விரைவில் பாகிஸ்தான் டெஸ்டில் இங்கிலாந்து விளையாட இருப்பதால் அதற்கான பயிற்சியை மேற்கொள்வதற்காக அவர்களை திரும்ப அழைக்கிறது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாட இருக்கிறது.
    கடினமான ஆடுகளத்தை தவிர்த்து மற்ற இடங்களில் ஜோஸ் பட்லர் கிளாஸ் பேட்ஸ்மேன் என்று ஸ்டீபன் பிளமிங் புகழாரம் சூட்டியுள்ளார். #IPL2018 #RRvCSK
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பட்லர் 60 பந்தில் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார்.

    அவரது ஆட்டத்தை பாராட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கடினமான ஆடுகளத்தை தவிர்த்து கிளாஸ் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘பட்லருக்கு எதிராக நாங்கள் ஏராளமான திட்டம் வைத்திருந்தோம். அதில் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னும் ஒன்று. அதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை. கடினமான ஆடுகளத்தை தவிர்த்து பட்லர் கிளாஸ் பேட்ஸ்மேன். அவர் இன்னிங்ஸ் முழுவதும் பேட் செய்தார். அவரை முன்னதாகவே வீழ்த்தியிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

    நாங்கள் பென் ஸ்டோக்ஸை விரைவில் வீழ்த்திய போதிலும், பட்லரை அவுட்டாக்க முடியவில்லை. அவர் நங்கூரம் பாய்ச்ச மாதிரி நின்றுவிட்டார். முதல் ஆறு ஓவரில் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள். இது ஒரு சிறந்த ஆட்டம். நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக செய்திருக்கனும். ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போய்விட்டது’’ என்றார்.
    ×