என் மலர்

  நீங்கள் தேடியது "NEDvENG"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
  • நெதர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

  ஆம்ஸ்டெல்வீன்:

  இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி, முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 49.2 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்தார். பாஸ் டி லீட் 56 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் ஒடோவ் அரை சதமடித்து 50 ரன்னில் வெளியேறினார்.

  இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 4 விக்கெட்டும், பிரிடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

  இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தி அணியின் வெற்றிக்கு உதவினார். பிலிப் சால்ட் 49 ரன்னில் வெளியேறினார்.

  இறுதியில், இங்கிலாந்து 30.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 101 ரன்னும், ஜோஸ் பட்லர் 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

  இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் காயம் காரணமாக விலகி உள்ளார்.
  • நெதர்லாந்து தொடரில் இயான் மார்கன் ரன் ஏதும் எடுக்கவில்லை.

  இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நெதர்லாந்து சென்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஆம்ஸ்டெல்வீனில் நடைபெறுகிறது.

  இந்நிலையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜாஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் இயான் மார்கன் 8 பந்துகள் மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் இந்த தொடரை முடித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், பிலிப் சால்ட் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர்.
  • மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக 2வது ஒருநாள் போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டது.

  ஆம்ஸ்டெல்வீன்:

  இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டது.

  அதன்படி, முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஸ்காட் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார்.

  இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், பிலிப் சால்ட் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர்.

  முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேசன் ராய் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பிலிப் சால்ட் 77 ரன்னில் வெளியேறினார். டேவிட் மலான், மொயீன் அலி ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

  இறுதியில், இங்கிலாந்து 36.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மலான் 36 ரன்னும், மொயீன் அலி 42 ரன்னும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

  இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒருநாள் போட்டிகளில் முதல் மூன்று அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக இங்கிலாந்து திகழ்ந்து வருகிறது.
  • ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் பட்லர் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

  இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்தது.

  499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த போட்டியில் 162 ரன்கள் குவித்த பட்லர் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

  நெதர்லாந்து அணிக்கு எதிராக 498 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில், முதல் மூன்று அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக இங்கிலாந்து திகழ்ந்து வருகிறது.

  அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியல்  ஒரு போட்டியில் 3 வீரர்கள் சதம் அடிப்பது இது 3-வது முறை ஆகும். ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே ஒரு இன்னிங்ஸில் மூன்று சதங்கள் அடிக்கப்பட்டன. இருமுறையும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான் அடித்தார்கள். 2015-ல் ஜோகன்னஸ்பர்க்கில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும், அதே ஆண்டு வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் மூன்று சதங்கள் அடித்திருந்தன. இந்நிலையில் ஒரு இன்னிங்சில் 3 சதங்கள் அடிக்கப்பட்ட அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி 2-வது இடத்தை பிடித்தது.

  அதிக முறை 400- ரன்களுக்கு மேல் குவிந்த அணியின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (6 முறை) அணி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் (5 முறை) உள்ளது.

  இங்கிலாந்து இன்னிங்சின் முதல் 35 ஓவர்களில், 9 சிக்ஸர்கள் மற்றும் 22 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன. 36-50 ஓவர்களில், இங்கிலாந்து 17 சிக்ஸர்களை அடித்தது. இதில் பட்லர் (10) லிவிங்ஸ்டன் (1) மலான் (1) சிக்சர்களும் அடித்தனர். ஒட்டுமொத்தமாக 26 சிக்சர்களை இங்கிலாந்து அணி அடித்தது. இது ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்சராகும். இந்த பட்டியலிலும் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்து ஆக்கிரமித்துள்ளது.

  ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த அணி பட்டியல்  மொத்தமாக இங்கிலாந்து பவுண்டரிகள் (36 பவுண்டரிகள், 26 சிக்ஸர்கள்) மூலம் 300 ரன்களைக் குவித்தது. இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் பவுண்டரிகளில் மட்டும் 300+ ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையையும் இங்கிலாந்து அணி தட்டிச்சென்றது.

  பட்லர் சாதனைகள்

  இந்த போட்டியில் பட்லர் தனது சதத்தை வெறும் 47 பந்துகளில் எட்டினார். இது ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் அடித்த இரண்டாவது அதிவேக சதமாகும். இங்கிலாந்தின் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் பட்லர்தான் இருக்கிறார். அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் 50 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் மூன்று முறை சதம் அடித்த ஒரே வீரர் அவர்தான்.

  பட்லர்  பட்லர் 65 பந்துகளில் 150 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் இருக்கிறார். 2015 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை அவர் (64 பந்துகளில்) படைத்தார்.

  இந்த போட்டியின் மூலம் லிவிங்ஸ்டனும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் லிவிங்ஸ்டன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் உள்ள ஏபி டிவில்லியர்ஸ் சாதனையை(16 பந்துகளில்) முடியடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் அதனை லிவிங்ஸ்டன் தவறவிட்டார். 13 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த அவர் 17-வது பந்தில்தான் அரை சதம் கடந்தார்.

  46-வது ஓவரில் லிவிங்ஸ்டன் 32 ரன்கள் குவித்தார். அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட்டது. ஒரு நாள் போட்டியில் ஒரே ஓவரில் இங்கிலாந்து எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். முன்னதாக 2007-ம் ஆண்டு தி ஓவல் மைதானத்தில் யுவராஜ் சிங்குக்கு எதிராக டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • அதிரடியாக ஆடிய இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

  ஆம்ஸ்டெல்வீன்:

  நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது.

  இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 498 ரன்கள் குவித்தது. சால்ட் 93 பந்துகளில் 122 ரன்னும், டேவிட் மலான் 125 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 47 பந்தில் சதமடித்து அசத்தினார். அவர் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 66 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

  இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை குவித்து இங்கிலாந்து உலக அணி சாதனை படைத்துள்ளது.

  இதையடுத்து, 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. ஆனால், நெதர்லாந்து 49.4 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இங்கிலாந்து 232 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது.

  நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

  அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் அடுத்தடுத்து சதம் அடித்தனர்.
  • அதிகபட்சமாக பட்லர் 162 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

  நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

  இரு அணிகள் பங்கேற்றுள்ள முதல் ஒருநாள் போட்டியில் ஆம்ஸ்டெல்வீன் நகரில் உள்ள வி ஆர் ஏ மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

  இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜேசன் ராய் ஒரு ரன்னுடன் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட், சர்வதேச போட்டியில் தமது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர்,

  93 பந்துகளில் 122 ரன்களை குவித்தார். மற்றொரு வீரர் டேவிட் மாலன் 109 பந்துகளில் 125 ரன்கள் அடித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த பட்லர்,  7 பவுண்டர்கள் மற்றும் 14 சிக்சர்களை அடித்து இங்கிலாந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

  கேப்டன் மோர்கன் டக் அவுட் ஆனார். லிவிங்ஸ்டோன் 66 ரன்கள் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 499 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
  • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

  நெதர்லாந்தில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

  இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய்-பிலிப் சால்ட் களமிறங்கினர். 1 ரன்னில் இருந்த ராய் ஸ்னேட்டர் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதனையடுத்து பிலிப் சால்ட்-டேவில் மலான் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிலிப் 1 அரை சதம் மற்றும் 1 சதம் அடித்துள்ளார்.

  ×