search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ENGvPAK"

    • இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
    • கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது என பாபர் ஆசம் பேட்டி

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:

    இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள், அவர்கள் சாம்பியனாவதற்கு தகுதியானவர்கள் மற்றும் நன்றாக போராடினார்கள். எங்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் பெரும் ஆதரவு கிடைத்தது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. நாங்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றோம். ஆனால் கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது.

    எங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடும்படி வீரர்களிடம் தெரிவித்தேன். ஆனால் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். வீரர்கள் பந்துவீச்சில் நன்றாகப் போராடினார்கள். எங்கள் பந்துவீச்சு உலகின் சிறந்த தாக்குதல்களில் ஒன்றாகும். ஆனால் ஆட்டத்தின்போது துரதிர்ஷ்டவசமாக, ஷாகீன் அப்ரிடி காயமடைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தார்.
    • இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. துவக்கம் முதலே நிதானமாக ஆடிய பாகிஸ்தான், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பாபர் ஆசம் 32 ரன்களும், சதாப் கான் 20 ரன்களும் சேர்த்தனர்.

    இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 169 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 170 ரன்களை எடுத்து வென்றது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் பாகிஸ்தான் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 6வது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 59 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் வில்லி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி 41 பந்தில் 88 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்த தொடரில் தற்போது 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனிலை பெற்றுள்ளன.

    • பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 63 ரன்கள் குவித்தார்.
    • இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி 51 ரன் அடித்தார்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்திருந்த. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றன. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது டி-20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். 


    இங்கிலாந்து வீரர் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், வில்லி மற்றும் சாம் குரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் டேவிட் மலான் 36 ரன்னும், கேப்டன் மொயின் அலி 51 ரன்னும் அடித்தனர்.


    பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இந்த தொடரில் தற்போது 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

    • பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 67 பந்துகளில் 88 ரன் குவித்தார்.
    • டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை முடிந்த 3 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

    இந்நிலையில் 4வது டி20 ஆட்டம் கராச்சி நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஒவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 67 பந்துகளில் 88 ரன்களும், பாபர் அசாம் 28 பந்துகளில் 36 ரன்னும் எடுத்தனர். ஷான் மசூத் 21 ரன் அடித்தார்.

    இதனைத்தொடர்ந்து 167 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி வீரர் பென் டுக்கெட் 33 ரன்னும், ஹாரி புரூக் 34 ரன்னும் அடித்தனர். கேப்டன் மொயின் அலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவ்சன் 34 ரன் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிந்தனர்.

    19.2 ஒவர் முடிவில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் மற்றும் ஹரிஸ் ரூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹஸ் நைன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த தொடரில் தற்போது 2-2 என்ற வெற்றிக் கணக்கில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் சமநிலையில் உள்ளன.

    லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 54 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து 4-0 எனத் தொடரை கைப்பற்றியது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    2-வது, 3-வது மற்றும் நான்காவது போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் இரண்டு அணிகளும் 300 ரன்களுக்கு மேல் குவித்தனர். இங்கிலாந்து இரண்டு முறை சேஸிங் செய்தது. ஒருமுறை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 73 பந்தில் 84 ரன்களும், மோர்கன் 64 பந்தில் 76 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. கிறிஸ் வோக்ஸ் தொடக்கத்தில் அபாரமாக பந்து வீச பாகிஸ்தான் 6 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் கேப்டன் சர்பராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.



    பாபர் ஆசம் 80 ரன்கள் சேர்த்தார். சர்பராஸ் அகமது 80 பந்தில் 97 ரன்கள் குவித்து சதத்தை தவறவிட்டார். சர்பராஸ் அகமது ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 31.5 ஓவரில் 193 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த வீரர்கள் முடிந்த அளவிற்கு அடித்து விளையாடினார்கள். ஆசிப் அலி 22 ரன்னும், இமாத் வாசிம் 25 ரன்களும், முகமது ஹஸ்னைன் 28 ரன்களும் சேர்க்க பாகிஸ்தான் 46.5 ஓவரில் 297 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    இதனால் இங்கிலாந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 4-0 எனவும் கைப்பற்றியது. இந்தத் தொடரில் 8 இன்னிங்சில் 7 முறை 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ஜேசன் ராய் 89 பந்தில் 114 ரன்கள் விளாச பாகிஸ்தானுக்கு எதிராக 341 ரன்களை சேஸிங் செய்து அசத்தல் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்தது.

    பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 63-வது போட்டியில் ஆடும் அவருக்கு இது 9-வது செஞ்சூரியாகும். பாபர் ஆசம் 112 பந்தில் 115 ரன்னும் (13 பவுண்டரி, 1 சிக்சர்), முகமது ஹபீஸ் 59 ரன்னும், பகர் ஜமான் 57 ரன்னும் எடுத்தனர். டாம் குர்ரான் 4 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 49.3 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 341 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று சாதித்தது.

    தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 8-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 89 பந்தில் 114 ரன்னும் (11 பவுண்டரி, 4 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 64 பந்தில் 71 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது ஹஸ்னைன், இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டும் ஜுனைத்கான், ஹசன் அலி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இங்கிலாந்தின் வெற்றியில் பாபர் ஆசமின் சதம் பலன் இல்லாமல் போனது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.



    முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இருந்தது. 2-வது மற்றும் 3-வது போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. கடந்த போட்டியில் இங்கிலாந்து 359 ரன் இலக்கை எடுத்தது. தற்போது 341 ரன் இலக்கை எடுத்து 3 விக்கெட்டில் வென்றுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் அந்த அணி கடும் சவாலாக விளங்கும். இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் லீடஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது.
    பாகிஸ்தானுக்கு எதிராக 93 பந்தில் 128 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது என பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் முதன்முறையாக இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார். 10 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து அசத்தினார். சராசரி 55.62 ஆகும். ஆர்சிபி-க்கு எதிராக சதம் விளாசினார்.

    தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

    பேர்ஸ்டோவ் 93 பந்தில் 128 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் மாறுபட்ட பயிற்சியாளர்கள், மாறுபட்ட வீரர்களிடம் இருந்து பல்வேறு மாறுபட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதில் சிறிய அளவில் போட்டியின் திட்டங்களும் இருக்கும்.

    டேவிட் வார்னர் முற்றிலும் மாறுபட்ட பகுதிகளில் பந்தை விரட்டக்கூடியவர். இது வேறெங்கும் இல்லாத முறை. இதில் இருந்து வார்னர் போன்ற வீரர்கள் இருக்கும்போது, நெருக்கடியான நிலையில் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதை கற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மெதுவாக பந்து வீசியதால், அந்த அணி கேப்டன் மோர்கனுக்கு ஐசிசி தடைவிதித்துள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. அந்த அணி 358 ரன்கள் குவித்தது.

    பாகிஸ்தான் பேட்டிங் செய்யும்போது இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர். இதனை போட்டி நடுவர் சுட்டிக்காட்டி கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்தார். அத்துடன் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சக வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.



    மோர்கன் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இதேபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் சில ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர்.

    ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை இப்படி நடந்தால் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். அதனடிப்படையில் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைமறுநாள் நாட்டிங்காமில் நடைபெறும் 4-வது போட்டியில் மோர்கன் விளையாடமாட்டார்.
    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 151 ரன்கள் அடித்த இமாம் உல் ஹக், அதிக ரன் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 151 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் 2-வது போட்டியில் பகர் ஜமான் 138 ரன்களும், 1999-ல் இஜாஸ் அகமது 137 ரன்களும், 1987-ல் மியான்தத் 113 ரன்களும் அடித்துள்ளனர்.
    லீட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் 68 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறி வருகிறது. #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இமாம் உல் ஹக் ரன்ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மந்தமாக விளையாடினார்கள். 10-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்துள்ளது. 68 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறி வரும் பாகிஸ்தான், 5-வது விக்கெட்டை விரைவில் இழந்தால், முதல் இன்னிங்சில் குறைவாக ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக வாய்ப்புள்ளது.
    இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லது என்னுடைய வாழ்நாள் நினைவாக இருக்கும் என அமிர் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    2-வது மற்றும் கடைசி டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்தில் பாகிஸ்தான் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்றால் என்னுடைய வாழ்நாள் நினைவாக இருக்கும் என முகமது அமிர் கூறியுள்ளார்.



    இதுகுறித்து முகமது அமதிர் கூறுகையில் ‘‘நாளை தொடங்கும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால், இதை சிறந்த நினைவாக கொண்டாட முடியும். இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் வைத்து வீழ்த்தியது மிகப் பெரிய சாதனை’’ என்றார்.
    ×