search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஷாகீன் அப்ரிடி காயமடைந்தது பெரிய அடி.... டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி தோல்வி குறித்து பாபர் ஆசம் கருத்து
    X

    ஷாகீன் அப்ரிடி, பாபர் ஆசம்

    ஷாகீன் அப்ரிடி காயமடைந்தது பெரிய அடி.... டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி தோல்வி குறித்து பாபர் ஆசம் கருத்து

    • இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
    • கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது என பாபர் ஆசம் பேட்டி

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:

    இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள், அவர்கள் சாம்பியனாவதற்கு தகுதியானவர்கள் மற்றும் நன்றாக போராடினார்கள். எங்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் பெரும் ஆதரவு கிடைத்தது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. நாங்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றோம். ஆனால் கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது.

    எங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடும்படி வீரர்களிடம் தெரிவித்தேன். ஆனால் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். வீரர்கள் பந்துவீச்சில் நன்றாகப் போராடினார்கள். எங்கள் பந்துவீச்சு உலகின் சிறந்த தாக்குதல்களில் ஒன்றாகும். ஆனால் ஆட்டத்தின்போது துரதிர்ஷ்டவசமாக, ஷாகீன் அப்ரிடி காயமடைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×