search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Azam Khan"

  • பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது.
  • இதற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களில் அசாம் கானை பார்த்து பாபர் அசாம் காண்டாமிருகம் என திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

  இதனை பார்த்த ரசிகர்கள் பாபர் அசாமுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேப்டன் என்ற முறையில் இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்த கூடாது எனவுக் கூறி வருகின்றனர்.

  பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்த போட்டி வருகிற 6-ந் தேதி கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம், டல்லாஸ் என்ற மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

  • இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
  • 4 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

  ஓவல்:

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

  இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

  இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

  இந்நிலையில் 4-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான அசாம் கான் மீது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஸ் ராஃப் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  இந்த போட்டியில் 9-வது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். இதனை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜக்ஸ் எதிர் கொண்டு ஆடினார். முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் திணறினார். 3-வது பந்தை அதிரடியாக விளையாடினார். ஆனால் பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. இதனால் ஹரிஸ் ராஃப் விக்கெட் என கொண்டாடினார். ஆனால் விக்கெட் கீப்பராக நின்ற அசாம் கான் அந்த எளிதான கேட்ச்சை தவற விட்டார். இதனை சற்று எதிர்பார்காத ஹரிஸ் கோபத்தில் கத்தினார்.

  இதற்கு ரசிகர்கள் அசாம் கானை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 2 போட்டியிலும் அசாம் கான் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
  • 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை.

  பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் அசம் கான் ஒரு பஸ் பயணத்தின் போது சக வீரர்களுடன் 'உணர்ச்சியற்ற' வீடியோவை உருவாக்கினார்.

  அந்த வீடியோவில் அவர் பணத்தால் வியர்வையைத் துடைப்பதைக் காணலாம். அவரது நகைச்சுவையின் ஒரு பகுதியாக, கிரிக்கெட் வீரரும் தனது கேப்டன் பாபர் ஆசாமுக்கு பதிலளிக்கும் போது அதையே செய்வதைப் பற்றி தற்பெருமை செய்வது போல் காட்டினார்.

  பாகிஸ்தான் கேப்டன் அசம் கான் தனது முகத்தை கரன்சி நோட்டுகளால் துடைக்கும் வீடியோவைப் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பாபர் ஆசாமை விமர்சித்து பேசி வருகின்றனர்.

  சர்ச்சைக்குரிய வீடியோ, பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

  இந்த நடவடிக்கை அவரது அருகாமையில் இருந்த சக ஊழியர்களிடமிருந்து அதிக சிரிப்பலை ஏற்படுத்தியிருந்தாலும், இது சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலான சீற்றத்தை ஈர்த்தது. ஒரு குறிப்பிட்ட சமூக ஊடகப் பயனர், ஆசம் கானின் 'உணர்ச்சியற்ற' செயல் தற்போது வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள 'ஏழை பாகிஸ்தானிய' குடிமக்களை இலக்காகக் கொண்டது என்று கூறினார்.

  இன்னும் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உண்மையில் உணர்ச்சியற்ற முட்டாள்கள். பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் இறக்கின்றனர். இவர்கள் இங்கிலாந்தில் அமர்ந்து ஏழை பாகிஸ்தானியர்களை கேலி செய்து பணத்தால் வியர்வையை துடைக்கிறார்கள். 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. என்று பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

  • சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம்கான்.
  • அசம்கான் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துவந்தார்.

  லக்னோ:

  சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கான் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

  இந்த வழக்கு உத்தர பிரதேச சிறப்பு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

  இதையடுத்து, உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து அசம் கானை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் உத்தரவிட்டார். அசம்கானின் ராம்பூர் சதார் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து அசம்கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

  • அசம் கான் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார்.
  • சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம் கான்.

  லக்னோ:

  சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

  இதற்கிடையே, இந்த வழக்கு உத்தர பிரதேச சிறப்பு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

  இந்நிலையில், உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து அசம் கானை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

  • சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம் கான்.
  • கடந்த பொதுத்தேர்தலில் பிரதமர், முதல் மந்திரி ஆகியோரை அவதூறாகப் பேசியிருந்தார்.

  லக்னோ:

  சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

  இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

  இந்நிலையில், இந்த வழக்கு உத்தர பிரதேச ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

  பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், சமாஜ்வாடி வேட்பாளராக அசம்கான் உள்ளிட்ட சர்ச்சை வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தலில் சர்ச்சைக்குரிய வேட்பாளர்களாக திகழ்ந்த பலர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில், பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், போபால் தொகுதியில் 3 லட்சத்து 64 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கை தோற்கடித்தார்.  பிரக்யா சிங், பிரசாரத்தின்போது, கோட்சேவை தேசபக்தர் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். மும்பை தாக்குதலில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேயின் மரணத்துக்கு தனது சாபமே காரணம் என்றும் கூறினார். இத்தகைய பேச்சுகளால், பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டார்.

  உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிட்ட அசம்கான், தனது எதிரணி வேட்பாளரான நடிகை ஜெயபிரதா குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையை உண்டாக்கினார். அவர் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  பீகார் மாநிலம் பெகுசாரையில் மத்திய மந்திரி கிரிராஜ்சிங் 4 லட்சத்து 22 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் தட்சணகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நளின் குமார் கதீல், உத்தரகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
  சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம் கான் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் தடை விதித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #AzamKhan
  புதுடெல்லி:

  உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் அசம் கான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

  கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான், ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து, சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அசம் கான் 72 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.  இந்நிலையில், தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் பேசியதாகவும், இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி சமாஜ்வாடி வேட்பாளரான அசம் கான், நாளை காலை 6 மணியில் இருந்து 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் உத்தரவிட்டது.

  சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான் மீது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #EC #AzamKhan
  சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. #ElectionCommission #AzamKhan #JayaPrada
  லக்னோ:

  உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக உள்ளார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

  அவருக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.  ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தனக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் போட்டியில் இருந்து விலக தயார் எனவும் யாரையும் பெயர் குறிப்பிட்டு தான் பேசவில்லை எனவும் ஆசம்கான் தெரிவித்தார்.

  இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என கூறி அவர் 72 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  இதன்படி அவர் நாளை காலை 10 மணி முதல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.  #ElectionCommission #AzamKhan #JayaPrada
  ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
  லக்னோ:

  உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  ஆனால், ஜெயப்பிரதா குறித்து அப்படி பேசவில்லை என்று கூறிய ஆசம் கான், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார்.

  இந்நிலையில்,  ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில், ஷகாபாத் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan