எம்.எல்.ஏ. பதவி இழந்தார் அசம் கான் - தகுதி நீக்கம் செய்த உ.பி. பேரவை செயலாளர்

அசம் கான் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம் கான்.
அசம் கான்
அசம் கான்
Published on

லக்னோ:

சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இதற்கிடையே, இந்த வழக்கு உத்தர பிரதேச சிறப்பு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து அசம் கானை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com