சமாஜ்வாடி தலைவர் அசம் கான் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

பாராளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஜெயப்பிரதா, சமாஜ்வாடியின் மூத்த தலைவர் அசம் கானிடம் தோற்றார்.
அசம் கான்
அசம் கான்
Published on

புதுடெல்லி:

முகமது அலி ஜவஹர் பல்கலைக்கழகத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் லோக்சபா எம்.பி.யான அசாம்கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசம்கான் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜரானார், அவரை சிறப்பு விசாரணைக்குழு விசாரித்தது. சமாஜ்வாடி தலைவர் அசம் கான் மீது 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 84 வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி கூறி மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com