search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shadab Khan"

    • நாங்கள் அங்கு செல்லும் போது அது அவர்களது சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.
    • என்னை பொறுத்தரை இந்தியாவிடம் தோற்றாலும் இறுதியில் கோப்பையை வெல்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

    இஸ்லாமாபாத்:

    50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

    10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

    இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமான மகிழ்ச்சியுடன் இருக்கும். இதில் ஒட்டு மொத்த அழுத்தமும் வித்தியாசமானது. நாங்கள் அங்கு செல்லும் போது அது அவர்களது சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.

    ஆனால் நாங்கள் அங்கு உலக கோப்பையில் விளையாட செல்கிறோம். எனவே அதுபற்றிதான் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று விட்டு உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் அதில் எந்த பலனும் இல்லை.

    என்னை பொறுத்தரை இந்தியாவிடம் தோற்றாலும் இறுதியில் கோப்பையை வெல்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், பாரூக்கி, நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 116 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ஷதாப் கான் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    • பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
    • பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வானும் இந்தியாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    சிட்னி:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 153 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    டேரியல் மிச்சேல் 35 பந்தில் 53 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வில்லியம்சன் 42 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த னர். ஷகீன்ஷா அப்ரிடி 2 விக்கெட்டும், முகமது நவாஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் 5 பந்து எஞ்சி இருந்த நிலையில் 153 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முகமது ரிஸ்வான் 43 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் பாபர் அசாம் 42 பந்தில் 53 ரன்னும் (7 பவுண்டரி), முகமது ஹாரிஸ் 26 பந்தில் 30 ரன்னும் ( 2 பவுண்டரி, 1 சிக்சர்) போல்ட் 2 விக்கெட்டும், சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதில் 2009-ல் கோப்பையை கைப்பற்றியது.

    பாகிஸ்தான் அணி 3 முறை அரை இறுதியில் (2010, 2012, 2021) தோற்று இருந்தது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் வருகிற 13-ந் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா அல்லது இங்கிலாந்தை எதிர் கொள்கிறது.

    இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் பாபர் அசாம் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த 3 போட்டிகளில் நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டோம். ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி. சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற உணர்வு இருக்கிறது.

    முதல் 6 ஓவரில் எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது. எங்களது சுழற்பந்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீரர்கள் இறுதியில் நன்றாக முடித்து வைத்தனர்.

    முதல் 6 ஓவரில் அதிரடியாக ஆடுவது என்று திட்ட மிட்டோம். அதன்படி செயல்பட்டோம். இந்த வெற்றி தருணத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம். ஆனால் அதே நேரத்தில் இறுதி போட்டியில் கவனம் செலுத்துவோம்.

    இறுதி போட்டியில் எந்த அணியை எதிர் கொள்வோம் என்பதை இப்போதே சொல்ல இயலாது. எந்த அணி வந்தாலும் நாங்கள் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவோம்.

    இறுதிப்போட்டி சவால்களை சமாளிக்க முயற்சி செய்வோம். பல கட்டங்களை கடந்து முன்னேறி உள்ளதால் இறுதி போட்டியில் அழுத்தம் இருக்கும்.கடந்த 3 ஆட்டத்தில் வெளிப்படுத்திய அதே திறமையை இறுதி போட்டியில் வெளிப்படுத்துவோம்.

    இவ்வாறு பாபர் ஆசம் கூறியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்துடனான வெற்றிக்கு பிறகு இறுதி போட்டியில் எந்த அணியை சந்திக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்தார்.

    இதே போல பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வானும் இந்தியாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் சேர்க்கப்பட்டுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், சதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    4-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 155-ல் சுருட்டி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ZIMvPAK #FakharZaman
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக் 113 ரன்களும், பகர் சமான் 210 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ஓவரில் 304 ரன்கள் குவித்தது.

    பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 155 ரன்னில் சுருண்டது.



    இந்த அணியின் டொனால்டு டிரிபானோ அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார். சிகும்புரா 37 ரன்களும், பீட்டர் மூர் 20 ரன்களும், மசகட்சா 22 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சாரபில் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 4-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #ZIMvPAK #FakharZaman #ShadabKhan #ImamulHaq
    முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 107-ல் சுருட்டி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ZIMvPAK
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் புலவாயோவில் இன்று தொடங்கியது. ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 128 ரன்களும், பகர் சமான் 60 ரன்களும், ஆசிப் அலி 46 ரன்களும் அடித்தனர்.

    பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சிபாபா 20 ரன்னும், முசாகண்டா 21 ரன்னும், விக்கெட் கீப்பர் முர்ரே அவுட்டாகாமல் 32 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஜிம்பாப்வே அணி 35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது.



    இனால் 201 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் 4 விக்கெட்டும், உஸ்மான் கான், பஹீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் 16-ந்தேதி நடக்கிறது.
    ×