என் மலர்

  நீங்கள் தேடியது "Morgan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மெதுவாக பந்து வீசியதால், அந்த அணி கேப்டன் மோர்கனுக்கு ஐசிசி தடைவிதித்துள்ளது.
  இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. அந்த அணி 358 ரன்கள் குவித்தது.

  பாகிஸ்தான் பேட்டிங் செய்யும்போது இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர். இதனை போட்டி நடுவர் சுட்டிக்காட்டி கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்தார். அத்துடன் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சக வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.  மோர்கன் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இதேபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் சில ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர்.

  ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை இப்படி நடந்தால் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். அதனடிப்படையில் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைமறுநாள் நாட்டிங்காமில் நடைபெறும் 4-வது போட்டியில் மோர்கன் விளையாடமாட்டார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 31 ரன்னில் வெற்றி பெற்றது. #SLvENG
  இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 10-ந்தேதி தம்புல்லாவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

  இங்கிலாந்து அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் வெற்றித் தோல்வியின்றி முடிவிற்கு வந்தது.

  இந்நிலையில் 2-வது ஆட்டம் தம்புல்லாவில் இன்று பகல் ஆட்டமாக நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. ஜோ ரூட் (71), மோர்கன் (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 50 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி சார்பில் மலிங்கா 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

  பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஒல்லி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சால் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

  இலங்கை அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. குசால் பெரேரா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.

  6-வது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் திசாரா பேரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இலங்கை அணி 29 ஓவரில் 140 ரன்கள் அடித்திருக்கும்போது மழை பெய்தது.  கனத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பெற்று டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  முதல் ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போனது. ஆனால், 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதிலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து வெற்றி என அறிவிக்கப்பட்டது.

  இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் 17-ந்தேதி பல்லேகலே மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளது என மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை படைத்தார்.

  2-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை). 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்தில் விளையாடும்போது லார்ட்ஸ் மைதானத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால் லார்ட்ஸில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது இங்கிலாந்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் குறைந்து காணப்படும். அத்துடன் லார்ட்ஸ் மைதானம் எப்பொழுதுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இரண்டு அணிகளும் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடும் என்று இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இயன் மோர்கன் கூறுகையில் ‘‘லார்ட்ஸ் மைதானம் மிகவும் அற்புதமானது. ஈரப்பதம் மட்டுமல்ல, ஆடுகளம் சதுர வடிவில் இருக்கும். இது எப்போதுமே கடினமான விஷயம். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் போன்றுதான் லார்ட்ஸ் செயலாற்றும் என நினைக்கிறேன். சுழற்பந்து வீச்சு மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் மிகப்பெரிய பங்காற்றும்.

  இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க ஆலோசனைகள் செய்யும். இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்காவிடில், அது அனைவருக்குமே ஆச்சர்யமாக இருக்கும்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் நீடிப்பதைவிட, இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்வதே முக்கியமானது என மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி லண்டன் லார்ட்ஸில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

  இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து தொடரை 1-2 என இழந்தால் கூட மாற்றம் ஏதும் வராது.

  இருந்தாலும் தரவரிசையை விட இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவதே முக்கியமானது என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘இந்தியா மிகவும் வலுவான அணி. முதல் போட்டியில் அவர்களது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இதனால் தொடரில் அவர்களை வீழ்த்தினால் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கும். குறிப்பாக நம்பிக்கை அதிகரிக்க முக்கியமானதாக இருக்கும்.  2-வது போட்டியில் பெற்ற வெற்றியை எல்லா போட்டிக்கும் எடுத்துச் சென்றால் சிறந்ததாக இருக்கும். அதேபோல் ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகமிக முக்கியமானது.

  நாளை நடக்கும் போட்டியில் குலதீப் யாதவ் சிறப்பாக பந்து வீசலாம். அதேபோல் உமேஷ் யாதவும் சிறப்பாக பந்து வீசலாம். இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிப்பதை விட இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றுவதே சிறந்தது’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியா போன்று எங்களை சாதாரணமாக எடை போடாதீர்கள் என்று மோர்கனுக்கு விராட் கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார். #ENGvIND
  ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சென்று ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இங்கிலாந்தின் அபார ஆட்டத்திற்கு ஆஸ்திரேலியாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6 போட்டியிலும் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. தற்போது இந்தியா தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாட இருக்கிறது.

  டி20 தொடரின் முதல் ஆட்டம் மான்செஸ்டரில் இன்றிரவு 10 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் எங்களை ஆஸ்திரேலியாவை போல் சாதாரணமாக எடை போடாதீர்கள் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு விராட் கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எங்களுடைய திறமை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. உண்மையிலேயே எங்கள் வீரர்களுக்கு எராளமான டி20 போட்டியில் விளையாடிய அனுபவம் உண்டு. ஐபிஎல் தொடருக்குப்பின் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டியில் சிறப்பாக விளையாடினோம். அணி சிறப்பானதாக உள்ளது.  எங்களை ஆஸ்திரேலியா போன்று எடை போட வேண்டாம். எங்களுக்கு இங்கிலாந்து கடும் சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இது மிகவும் சிறந்த தொடராக இருக்கும். முக்கியமான தருணத்தில் நாம் வெற்றி பெற்றால் எதுவேண்டுமென்றாலும் நடக்கலாம்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். #ENGvAUS
  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

  இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான், கிரேக் ஓவர்டன் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே காயம் ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயம் அடைந்திருக்கும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளர்.  20 வயதாகும் சாம் குர்ரான் இங்கிலாந்து அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். கிரேக் ஓவர்டன் 3 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இருவரும் இதுவரை விளையாடியது கிடையாது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியா 242 ரன்னில் படுதோல்வியடைந்தது வார்னே, மைக்கேல் கிளார்க்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ENGvAUS
  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பேர்ஸ்டோவ் (92 பந்தில் 139), அலெக்ஸ் ஹேல்ஸ் (92 பந்தில் 147), மோர்கன் (30 பந்தில் 67), ஜேசன் ராய் (61 பந்தில் 82) ஆகியோரின் அதிரடியால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது.

  பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 37 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 239 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 51 ரன்னும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 44 ரன்களும் அடித்தனர். மொயீன் அலி (3), அடில் ரஷித்தின் சுழலில் சிக்கி 242 ரன்னில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்ததால் முன்னாள் ஜாம்பவான்கள் ஷேன் வார்னே, மைக்கேல் கிளார்க் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  அவர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக லெவன் அணியில் இருந்து விலகிய மோர்கன் ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvAUS
  இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக இருப்பவர் மோர்கன். இவர் மிடில்செக்ஸ் கவுன்ட்டி அணிக்காக விளையாடி வருகிறார். ராயல் லண்டன் ஒருநாள் கோப்பைக்கான தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோமர்செட் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடினார். அப்போது பீல்டிங் செய்யும்போது வலது கை மோதிர விரலில் முறிவு ஏற்பட்டது.

  இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான உலக லெவன் அணியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.  இந்த தொடர் ஜூன் 13-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா தொடர் தொடங்குவதற்கு முன்பு காயம் குணமடைந்து தயாராகிவிடுவேன் என்று மோர்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடும் உலக லெவன் அணியில் இருந்து மோர்கன் விலகியதால், அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  வெஸ்ட் இண்டீஸ் - ஐசிசி உலக லெவன் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளைமறுநாள் (31-ந்தேதி) நடைபெறுகிறது. இதற்கான உலக லெவன் அணியின் கேப்டனாக இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் மோர்கன் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

  தற்போது அவரது கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  மோர்கனுக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் உலக லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் தைமல் மில்ஸ், சாம் குர்ரான் ஆகியோரும் உலக லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
  ×