search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lords Test"

    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா படுதோல்விக்கு வீரர்களின் மோசமான ஆட்டத்துடன் வானிலையும் முக்கிய காரணம் என்பதை அலச வேண்டியுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. ஆண்டர்சன், பிராட் ஆகியோரது பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்த போதிலும் சாம் குர்ரான், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் இந்தியாவின் வெற்றியை பறிகொடுத்துவிட்டனர்.

    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி சில போட்டிகளில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. லார்ட்ஸ் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கக் கூடிய மைதானம் ஆகும். இதனால் போட்டி நடைபெறுவதற்கு முன்பு இரண்டு அணிகளும் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் என்ற பேச்சுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கு மற்றொரு காரணம் இங்கிலாந்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பம் அதிகமாக இருப்பதுதான்.



    இந்நிலையில்தான் போட்டி நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாள் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. 2-வது நாளும் மழையால் ஆட்டம் தடைபெற்றது. இந்தியா ஆல்அவுட் ஆன 35.2 ஓவருடன் 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

    அதன்பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்கேர் செய்தது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 130 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.



    இந்திய அணி குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோரும் களம் இறங்கியதும், பேட்ஸ்மேன் சொதப்பலும்தான் தோல்விக்கு காரணம் என்று கடும் விமர்சனம் எழும்பியுள்ளது. உச்சக்கட்டமாக தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் பிசிசிஐ மோசமான ஆட்டம் குறித்து விளக்கம் கேட்க உள்ளது.

    முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது குறித்து யாரும் விமர்சனம் எழுப்பாத நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மீது பழிபோடுகிறார்கள். ஆனால், தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மட்டும்தானா? காரணம் என பார்க்க வேண்டும். லார்ட்ஸ் டெஸ்டில் வானிமை மையம் இந்தியாவிற்கு எதிராக தாண்டவம் ஆடியது. 2-வது நாள் மழை விட்டபிறகு ஆட்டம் தொடங்கியது. இந்தியா டாஸ் தோற்று பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.



    6 ஓவர்கள் போடுவதற்குள் மழை மீண்டும் குறுக்கீட்டது. இங்கிலாந்து ஆடுகளத்தில் மேகமூட்டமாக இருந்தாலோ, மழை விட்டுவிட்டு பெய்து ஆடுகளம் சற்று ஈரமாக இருந்தாலோ பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் இந்தியா 107 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்தியா ஆல்அவுட் ஆன பிறகு ஆண்டர்சன் கூறுகையில் ‘‘இதுபோன்ற வானிலை இருக்கும்போது இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல எந்தவொரு நாட்டு பேட்ஸ்மேன்களுக்கும் இதே கதிதான், குறிப்பாக எங்கள் நாட்டு பேட்ஸ்மேன்கள் கூட நாங்கள் பந்து வீசினால் திணறிப் போவர்கள்’’ என்றார்.

    அதுபோகட்டும் 3-வது நாள் இங்கிலாந்து பேட்டிங் செய்ய வரும்போது வெயில் சுல்லென்று அடித்தது. இதனால் 15 ஓவர்களுக்குப் பிறகு பந்து ஸ்விங் ஆகவில்லை. பந்து வேலை செய்யும்போது இந்தியா 131 ரன்னுக்கள் ஐந்துவிக்கெட்டுக்களை சாய்த்துவிட்டது. ரிவர்ஸ் ஸ்விங், சுழற்பந்து வீச்சுக்கு டர்ன் என எதுவுமே இல்லை. இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் எளிதாக ரன் சேர்த்தனர். 24 டெஸ்டில் 863 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவரால் முதல் சதத்தை பதிவு செய்ய முடிந்தது.

    3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும். 39 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து டிக்ளேர் செய்தது.



    4-வது நாள் காலையில் வானிலை மேகமூட்டமாக இருந்ததால், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டிக்ளேர் செய்தார். இந்தியா பேட்டிங் செய்யும்போது அவ்வப்போது சிறுசிறு மழைத்துளிகள் விழுந்த வண்ணம் இருந்தது. உணவு இடைவேளையின்போது மழை பெய்தது. இதைப் பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து இந்தியாவை 130 ரன்களில் சுருட்டிவிட்டனர்.

    இதனால் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே களம் இறங்கியது இந்தியா தோல்விக்கு காரணம் என்ற சொல்லிவிட இயலாது. வானிலை முக்கிய பங்கு வகித்தது. ஒருவேளை மழை பெய்யாமல் இருந்திருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருந்திருக்கும்.

    இதனால் லார்ட்ஸ் டெஸ்டை வைத்து மட்டுமே ஒட்டுமொத்த இந்திய அணியை எடைபோடுவது சரியாகுமா.....
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 2-வது இன்னிங்சில் 66 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி செல்கிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய தொடக்க வீரர்களான முரளி விஜய் (0), லோகேஷ் ராகுல் (10) இந்த இன்னிங்சிலும் சொதப்பினார்கள்.



    அதன்பின் வந்த புஜாரா 17 ரன்னிலும், ரகானே 13 ரன்னிலும் வெளியேறினார்கள். விராட் கோலி 17 ரன்னில் வெளியேற, அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால் இந்தியா 61 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 32 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இன்னும் 56 ஓவர்கள் உள்ளது. கடைசி நாளான நாளையும் மீதமுள்ளது. இங்கிலாந்திற்கு இன்னும் ஒரு மணி நேரம் மழை அனுமதி அளித்தால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.
    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் 137 நாட்அவுட். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஆண்டர்சனின் (5) அபார பந்து வீச்சால் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இங்கிலாந்து நேற்றைய 3-வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் (120 நாட்அவுட்), பேர்ஸ்டோவ் (93) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்னுடனும், சாம் குர்ரான் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாம் குர்ரான் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    கிறிஸ் வோக்ஸ் 137 ரன்னுடன் களத்தில் இருந்தார். தற்போது வரை இந்தியா முதல் இன்னிங்சில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    இங்கிலாந்து - இந்தியா 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட்டிற்கான முழுத் தொகையையும் லார்ட்ஸ் திருப்பி வழங்குகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாததால் முதல் டிக்கெட் வாங்கியவர்களுக்கு, டிக்கெட்டிற்கான முழுத் தொகையையும் வழங்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் முடிவு செய்துள்ளது.



    இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்டின்போது மழைக் காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்தானது. அதன்பின் தற்போதுதான் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய 2-வது நாள் ஆட்டமும் மழையினால் தடைபட்டு வருகிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் எதிர்கொள்ள ஆண்டர்சன் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் முரளி விஜய் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    2-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



    ஆண்டர்சன் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் இழந்ததால், இந்தியா 6.1 ஓவரிலேயே தொடக்க விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

    3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி இரண்டு பந்துகள் சந்தித்து ஒரு ரன் எடுத்தபோது 6.3 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு தேர்வு செய்துள்ளது. புஜாரா, குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நேற்று தொடங்குவதாக இருந்தது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் டாஸ் கூட சுண்டப்படாமல் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

    2-வது நாள் இன்று உள்ளூர் நேரப்படி சரியான 11 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.



    இந்திய அணியில் ஷிகர் தவான், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் போப் அறிமுகமாகியுள்ளார். பென் ஸ்டோக்ஸிற்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க இருந்தது. டாஸ் சுண்டப்படுவதற்கு முன் மழை பெய்தது. தொடர்ந்து மழைத்தூறல் இருந்து கொண்டே இருந்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.



    அதன்பின்னரும் மழைத்தூறல் விட்டுவிட்டு தூவிக் கொண்டிருந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் மழைக் காரணமாக காலதாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 31 ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

    இந்நிலையில் 2-வது ஆட்டம் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்கான டாஸ் 3 மணிக்கு சுண்டப்படும். ஆனால் லார்ட்ஸில் லேசான மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அணியில் இளம் வீரரான போப் அறிமுகமாகிறார். இந்திய அணியில் இடம் பெறும் 11 வீரர்கள் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளது என மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை படைத்தார்.

    2-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை). 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்தில் விளையாடும்போது லார்ட்ஸ் மைதானத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால் லார்ட்ஸில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    தற்போது இங்கிலாந்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் குறைந்து காணப்படும். அத்துடன் லார்ட்ஸ் மைதானம் எப்பொழுதுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இரண்டு அணிகளும் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடும் என்று இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து இயன் மோர்கன் கூறுகையில் ‘‘லார்ட்ஸ் மைதானம் மிகவும் அற்புதமானது. ஈரப்பதம் மட்டுமல்ல, ஆடுகளம் சதுர வடிவில் இருக்கும். இது எப்போதுமே கடினமான விஷயம். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் போன்றுதான் லார்ட்ஸ் செயலாற்றும் என நினைக்கிறேன். சுழற்பந்து வீச்சு மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் மிகப்பெரிய பங்காற்றும்.

    இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க ஆலோசனைகள் செய்யும். இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்காவிடில், அது அனைவருக்குமே ஆச்சர்யமாக இருக்கும்’’ என்றார்.
    லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அலஸ்டைர் குக் (70) மட்டும் நிலைத்து நின்று விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. அசார் அலி (50), ஆசாத் ஷபிக் (59), பாபர் அசாம் (68), ஷதாப் கான் (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 114.3 ஒவர்கள் விளையாடி 363 ரன்கள் குவித்தது.

    முதல் இன்னிங்சில் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட்டை (68) தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் இங்கிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்ததது.


    அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த இங்கிலாந்து வீரர்

    6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் என்று தத்தளித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு ஜோஸ் பட்லர் உடன் பெஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 56 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி மேலும் 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தானுக்கு 150 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கலாம் என்று நினைப்புடன் இங்கிலாந்து இன்றைய 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

    பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் தொடர்ந்து விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய 8-வது பந்தில் பட்லர் மேலும் ஒரு ரன் எடுத்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். 80-வது ஓவரை முகமது அப்பாஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பட்லர் எல்பிடபிள்யூ ஆனார்

    அடுத்த ஓவரில் மார்க்வுட் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் டக்அவுட்டில் வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் முகமது அமிர் பெஸ்-ஐ க்ளீன் போல்டாக்கினார். இதனால் இங்கிலாந்து 82.1 ஓவரில் 242 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.


    சேஸிங் செய்த சந்தோசத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்

    இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து 4.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 63 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தானுக்கு 64 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    64 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 12.4 ஓவர் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 66 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை பாகிஸ்தான் இங்கிலாந்து செல்லும்போது தொடரை 2-2 என சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சில் முகமது அமிர், முகமது அப்பாஸ் தலா நான்கு விக்கெட்டுக்களும், சதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய முகமது அப்பாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜூன் 1-ந்தேதி லீட்ஸில் தொடங்குகிறது.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் ஸ்டோன்மேன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்தில் க்ளீன் போல்டானார்.



    அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் (4), தாவித் மலன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.



    தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 70 ரன்கள் அடிக்க 58.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    ×