என் மலர்
கிரிக்கெட் (Cricket)

லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு- இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம்..!
- முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
- இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2ஆவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் 3ஆவது டெஸ்ட் இன்று புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து 3 போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார்.
இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story






