என் மலர்
கிரிக்கெட் (Cricket)

90 ஓவர்கள் வீச முடியவில்லை: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் ஆதங்கம்..!
- முதல் நாளில் இந்தியா 83 ஓவர்கள் மட்டுமே வீசியது.
- 2ஆவது நாளில் இரு அணிகளும் சேர்ந்து 75 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளன.
முதல் நாளில் 83 ஓவர், 2ஆவது நாளில் 75 ஓவர் என நிர்ணயிக்கப்பட்ட 90 ஓவர்கள் வீசாததற்கு இங்கிலாந்து முன்னாள் கேப்ன்கள் மைக்கேல் ஆதர்டன், மைக்கேல் வாகனம் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது, 2ஆது நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட் போட்டியை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வீச வேண்டும். ஆனால் முதல் இன்னிங்சில் இந்தியா 83 ஓவர்கள்தான் வீசியது. 2ஆவது நாளில் இந்தயா- இங்கிலாந்து அணிகள் 75 ஓவர்கள் வீசியுள்ளளனர்.
இந்த நிலையில் மெதுவாக பந்து வீசியதற்காக மைக்கேல் ஆதர்டன், மைக்கேல் வாகன் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆதர்டன் கூறுகையில் "இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 110ஆவது ஓவரின்போது சுப்மன் கில் முதுகில் வலி ஏற்பட்டதாக சிகிச்சை மேற்கொண்டார். நடுவர்கள் இதனால் நீண்ட நேரம் போட்டியை நிறுத்தினர். அதற்குப் பதிலாக மைதானத்தில் இருந்து வெளியேறுமாறு கூறி, போட்டி தொடர்ந்து நடைபெற அனுமதித்திருக்க வேண்டும்.
லேசான காயம், பந்து மாற்றுதல், பவுலர்கள் ஜம்ப் செய்யும் க்ரீஸ் பகுதி சேதம், பேட்ஸ்மேன்கள் நிற்கும் இடத்தை சரிசெய்தல் போன்றவற்றிற்காக போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்த பிரச்சினையால் நடுவர்கள் கட்டுப்பாட்டை இழந்தனர்" என்றார்.
மைக்கேல் வாகன் கூறுகையில் "அபராதம் வேலை செய்யாது என நினைக்கிறேன். விளையாடும் வீரர்கள் ரொம்ப பணக்காரர்கள் என நினைக்கிறேன். பணம் அவர்களை பாதிக்கும் என நினைக்கவில்லை.
சிறிது காலமாக இந்த பிரச்சினை இருக்கிறது. இங்கு கடும் வெயில் என்று எனக்குத் தெரியும். சில காயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், 5ஆவது நாள் என்று வரும்போது, 90 ஓவர்கள் வீச வேண்டும்" என்றார்.






