search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malinga"

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் இலங்கை அணிக்கு பந்துவீச்சு வியூக பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
    கொழும்பு:

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற 7-ந் தேதி கொழும்பில் நடக்கிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் இலங்கை அணிக்கு பந்துவீச்சு வியூக பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறும்போது, மலிங்காவின் அனுபவம் நிபுணத்துவம் அறிந்து நாம் முக்கியமானதாக இருக்கும்.

    இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு தொழில்நுட்பம் நிபுணத்துவம், அணிக்கு மிகவும் ஆகியவற்றை வழங்கி களத்தில் திட்டங்களை செயல்படுத்த உதவுவார். அவரது அனுபவம் குறிப்பாக 20 ஓவர் தொடரில் அணிக்கு பெரிதும் உதவும் என்று தெரிவித்துள்ளது.
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 31 ரன்னில் வெற்றி பெற்றது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 10-ந்தேதி தம்புல்லாவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இங்கிலாந்து அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் வெற்றித் தோல்வியின்றி முடிவிற்கு வந்தது.

    இந்நிலையில் 2-வது ஆட்டம் தம்புல்லாவில் இன்று பகல் ஆட்டமாக நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. ஜோ ரூட் (71), மோர்கன் (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 50 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி சார்பில் மலிங்கா 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஒல்லி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சால் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இலங்கை அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. குசால் பெரேரா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் திசாரா பேரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இலங்கை அணி 29 ஓவரில் 140 ரன்கள் அடித்திருக்கும்போது மழை பெய்தது.



    கனத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பெற்று டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போனது. ஆனால், 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதிலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து வெற்றி என அறிவிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் 17-ந்தேதி பல்லேகலே மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா மீது இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். #MeToo
    அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ‘மீடூ’ இந்தியாவில் பாலிவுட்டை மையம் கொண்டது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது. இந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். இதையடுத்து தற்போது இந்தியாவில் மீடூ வைரலாகி உள்ளது.

    தமிழகத்தில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினார். அதற்கு அவரும் விளக்கம் அளித்து உள்ளார். இது தற்போது தமிழ்நாட்டில் விவாதமாக மாறி பரபரப்பை ஏற்படுத்து வருகிறது.

    இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இலங்கை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.

    1996-ம் ஆண்டு இலங்கை உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ரணதுங்கா. இவர் 296 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடி உள்ளார். இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் புதன்கிழமை பேஸ்புக்கில், இந்திய ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளம் அருகே ரணதுங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார்.



    ஒட்டலின் நீச்சல் குளம் அருகே நடந்து சென்றபோது ரணதுங்கா என் இடுப்பை பிடித்து கொண்டு இழுத்து, என் மார்பின் பக்கமாக கைகளை கொண்டு வந்தார். மிகவும் அச்சம் அடைந்த நான், அவரது கால்களில் உதைத்தேன். இந்திய பெண்ணோடு தவறாக நடக்க முயற்சி செய்கிறார் என்று புகார் கூறி பாஸ்போர்ட்டை முடக்கி விடுவேன் என்று கூறினேன். அத்துடன் நேரத்தை வீணடிக்காமல் நான் வரவேற்பறையை நோக்கி வேகமாக ஓடி புகார் கூறினேன். இருந்தாலும் இது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று அவர்கள் கைவிரித்துவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு பெண் தானும் ஒரு கிரிக்கெட் வீரரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சின்மயி இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
    சர்வதேச கிரிக்டெ் போட்டிக்கு மலிங்காவால் திரும்ப முடியும் என்று இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Malinga
    இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் லசித் மலிங்கா. தனது யார்க்கர் பந்து வீச்சால் உலக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியவர். 34 வயதாகும் மலிங்கா 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. டி20 லீக் தொடரில் விளையாடுவதற்காக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் கவனம் செலுத்தினார். 2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மலிங்காவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அவரை பந்து வீச்சு ஆலோசகராக நியமித்தது.

    இதனால் இலங்கையில் நடைபெறும் உள்ளூர் தொடரில் மலிங்கா விளையாடவில்லை. உள்ளூர் தொடரில் விளையாடினால் மட்டுமே தேசிய அணியில் இடம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டவட்டாக தெரிவித்தது. இதனால் 2017 செப்டம்பரில் இருந்து சர்வதேச போட்டிக்கான அணியில் இடம்பெறாமல் இருக்கிறார்.

    சமீபத்தில் நடைபெற்ற கனடா குளோபல் டி20 லீக் தொடரில் மலிங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடரில் இடம்கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. இந்நிலையில் உள்ளூர் போட்டியில் விளையாடினால் இடம் உறுதியாக கிடைக்கும் என இலங்கை தலைமை பயிற்சியாளர் ஹதுருசிங்காக தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஹதுருசிங்கா கூறுகையில் ‘‘மலிங்கா எங்களுடைய திட்டத்தை முழுமையான நிறைவேற்ற வேண்டும் என்று தேர்வுக் குழு விரும்புகிறது. அவர் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும். இதில் நாங்கள் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கமாட்டோம்.

    இலங்கை அணிதான் நம்பர் ஒன். அணி கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவரை மாறுபட்ட கோணத்தில் அனுக இயலாது. மலிங்கா தரம் வாய்ந்த வீரர். முந்தைய காலத்தில் பந்து வீசிய மாதிரி தன்னால் தற்போதும் பந்து வீச இயலும் என அவர் நிரூபிக்க வேண்டும். பந்து வீச்சில் மட்டுமல்ல, பீல்டிங்கிலும் அசத்த வேண்டும். அவர் விளையாடுவதற்கு விரும்பினால், உள்ளூர் தொடரில் விளையாட வேண்டும்’’ என்றார்.
    ×