என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் - மலிங்கா சாதனையை முறியடித்த பும்ரா
    X

    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் - மலிங்கா சாதனையை முறியடித்த பும்ரா

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • மும்பை அணிக்காக மலிங்கா 170 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மலிங்காவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

    மும்பை அணிக்காக பும்ரா இதுவரை 174 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக மும்பை அணிக்காக மலிங்கா 170 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.

    Next Story
    ×