என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    150 விக்கெட்டுகள் வீழ்த்தி மலிங்கா சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல்
    X

    150 விக்கெட்டுகள் வீழ்த்தி மலிங்கா சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல்

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.

    இப்போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற லசித் மலிங்காவின் சாதனையை ஐதராபாத் வீரர் ஹர்ஷல் படேல் முறியடித்தார்.

    ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் மலிங்கா (2,444 பந்துகள்), சாஹல் (2,543 பந்துகள்), ப்ராவோ (2,656 பந்துகள்), பும்ரா (2,832 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.

    Next Story
    ×