என் மலர்
நீங்கள் தேடியது "கிரிக்கெட் போட்டி"
- கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ள ரவீந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
- அவர் காலையில் அதிகாலையில் எழும்போது நலமுடனே இருந்தார். தந்தையுடன் தேநீர் அருந்தினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் சிப்ரி பஜார் பகுதியில் உள்ள நல்கஞ்சில் வசித்து வந்தவர் 30 வயதான ரவீந்திர அஹிர்வார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எல்.ஐ.சி.யில் மேம்பாட்டு அதிகாரியாக ரவீந்திரன் பணியில் சேர்ந்தார்.
கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ள ரவீந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். நேற்று காலை, உள்ளூரில் அரசுக் கல்லூரி மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
விளையாடும்போது அசௌகரியத்தை உணர்ந்த ரவீந்திரனின் மைதானத்திலிருந்து தண்ணீர் குடிக்க சென்றார். அவர் தண்ணீரை குடித்த உடனே வாந்தி எடுத்து சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சச்சின் மகோர், பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் உணமையான காரணம் புலனாகும் என்று தெரிவித்தார்.
ரவீந்திரனின் தம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் காலையில் அதிகாலையில் எழும்போது நலமுடனே இருந்தார். தந்தையுடன் தேநீர் அருந்தினார். விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். 1 மணி நேரதிற்கு பிறகு அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது" என்று தெரிவித்தார்.
- கேரளாவை சேர்ந்த இளைஞன், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியுள்ளார்.
- உடலின் உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞன் கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தது.
கர்நாடகாவின் மங்களூரில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்தது.
பத்து அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிக்கான மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த இளைஞன், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரிடம் வாக்குவாதம் செய்தது.
இது மோதலாக மாறி அவர்கள் அந்த இளைஞனை உதைத்தும், தடியால் தாக்கியும் உள்ளனர். இதனால் உடலின் உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இளைஞன் உடலை கைப்பற்றிய கர்நாடக போலீசார் இந்த சம்பவத்தில் 15 பேரை கைது செய்துள்ளனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- 10 அணிகள் பங்கேற்பு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் விளையாட்டு சங்கத்தின் 2022 - 2023 ஆண்டுக்கான முதல் லீக் போட்டிகள் தூய நெஞ்சக் கல்லூரியில் தொடங்கியது. கிரிக்கெட் போட்டிக்கு திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஏ.சுந்தர் தலைமை தாங்கினார்.
அனைவரையும் செயலாளர், ஜெயச்சந்திரன், வரவேற்றார், திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹாவிற்கு வீரர்களை அறிமுகம் செய்து கலெக்டர் பேட்ங செய்து தொடங்கி வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளரும் (பொது) துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், தூயநெஞ்சக் கல்லுரி உடற் கல்வி இயக்குனர் டாக்டர்.பின்டோ தேவராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி தொடரில் முதல் பிரிவில் 10 அணிகளும், இரண்டாவது பிரிவில் 10 அணிகளும் விளையாடுகிறது.
முதல் போட்டியில் மொன்ஸ்டர் கிரிக்கெட் கிளப் அணியும் ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணியும் விளையாடியனர்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
- வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும்
வேலூர்:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்கள் வேலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சி என 8 மண்ட லங்களாக பிரிக்கப்பட்டு 5 நாட்கள் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.
மண்டலம் 'பி-யில் அடங்கிய வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் வேலூர் நறுவீ மருத்து வமனை தலைவருமான ஜி.வி. சம்பத் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்ற அணி வீரர்களை எதிரிகளாக பார்க்காமல், வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும். விளையாட்டில் தோல்வி என்பது வெற்றிக்கு அடுத்த படியாகும் என்று வீரர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து போட்டியா ளர்களை வாழ்த்தினார்.
இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் விளையாட்டு (கிரிக்கெட் போட்டி) குழு தலைவர் கூத்தரசன், வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் சாய் விக்னேஷ்வரன், துணைத் தலைவர்கள் கிருஷ்ண குமார். கங்காதரன், இணை செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் போட்டியில் வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அணியும் மோதின. கிரிக்கெட் போட்டிகளை சென்னையை சேர்ந்த் கே.எச். கோபிநாத் நடுவராக இருந்து வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்கிறார்.
மாவட்டங்க ளுக்கு இடையிலான மாநில அளவிலான இப்போட்டி யில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வெற்றி பெறும் இரண்டு அணிகள் அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்கும்.
- தி.மு.க. சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
- வென்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
பாப்பிரெட்டிப்பட்டி.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொ.மல்லாபுரம் பேரூர் கழக தி.மு.க. மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
பொ.மல்லாபுரம் தி.மு.க. நகர செயலாளர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.சரவணன் போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகோகுல்நாத், நகர அவைத்தலைவர் செல்வம், கிளை செயலாளர்கள் பொன்.பரமன், ராஜேந்திரன், நிர்வாகிகள் பிலிப், சந்திரன், ராஜா, ஆசைத்தம்பி, மணி, அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி துவக்க விழா நடைபெற்றது.
- இறுதிப்போட்டி வரும் பொங்கல் அன்று நடைபெறும்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு பகுதியில் கருப்பு சிங்கம் கிரிக்கெட் குழுவினர் கடந்த 13 வருடங்களாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி துவக்க விழா நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியை பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார்.
இது குறித்து கருப்பு சிங்கம் கிரிக்கெட் அணி குழு தலைவர் இந்திர விஜய் கூறுகையில், கடந்த 13 வருடங்களாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை கள்ளிமேடு பகுதியில் நடத்தி வருகிறோம்.
அதேபோல இந்த ஆண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது இதில் பல்லடம், திருப்பூர், உடுமலை, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொள்கின்றனர்.
இறுதிப்போட்டி வரும் பொங்கல் அன்று நடைபெறும். அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.
- மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
ஊட்டி
தி.மு.க இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குன்னூர் நகர தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் தலைமையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.போட்டியை நகர மன்ற தலைவர் சீலா கேத்ரின் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜா தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற வெலிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நகர செயலாளர் ராமசாமி பரிசு வழங்கினார். இரண்டாம் பரிசு கன்னி மாரியம்மன் கோவில் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை பேச்சாளர் ஜாகிர் உசேன் வழங்கினார். அருகில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர், செல்லின் ராஜ், சாதிக் பாட்சா, நகர துணை செயலாளர் முருகேசன் மற்றும் வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன், கிளை செயலாளர் சிக்கந்தர் அப்துல் காதர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்டம் மாணவர் அணி துணை அமைப்பாளர் விஜய், ராஜ், நந்தகுமார் சதீஷ்குமார், மதிவாணன், பாலச்சந்தர், மகாலி, சதீஷ் தினேஷ், வினோத்குமார், செல்வா, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெரும் அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு, கோப்பை வழங்கப்படுகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர், தெள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்க ளுக்கான ஒரு மாதகாலம் நடக்க இருக்கும் மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி தொடக்க விழா நேற்று ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் உள்ள மைதா னத்தில் தொடங்கியது.
முதல் நாள் தொடக்க விழாவில் மாவட்ட கவுன்சிலர் த.பாபு, ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தனர். முதல் நாளான நேற்று 5-க்கும் மேற்ப்பட்ட அணிகள் பங்கேற்று ஆர்வமுடன் விளையாடின.
இதனையடுத்து போட்டியில் வெற்றி பெறும் அணிகள் அடுத்தடுத்த நடக்க இருக்கும் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதற்கான போட்டிகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடத்தபடுகிறது.
ஒரு மாதம் நடக்கும் இந்த போட்டிகளில் இறுதியாக வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.30ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 7 அடி உயர கோப்பையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 5 அடி உயர கோப்பையும் இதனைத்தொடர்ந்து 10 பரிசுகள் மற்றுன் கோப்பைகள் வழங்கப்பட உள்ளனர்.
மேலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு பல்வேறு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.
இதில் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிய வாலிபர் ஒருவருக்கு தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் ரூ.500 அன்பளிப்பாக வழங்கினார். இதில் தெள்ளூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.
32-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இரு அணியினரை நகர செயலாளர் கே.பி. எஸ் பழனியப்பன முன்னிலையில், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அறிமுகம் செய்து ேபாட்டியை தொடங்கி வைத்தனர். முதல் பரிசை துவார் அணியும், 2-ம் பரிசை குளத்துப்பட்டி அணியும், 3-ம் பரிசை துவார் செந்தில் நினைவு குழு அணியும், 4-வது பரிசை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணியும் தட்டிச் சென்றனர். மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், ஒன்றிய துணை செயலாளர் கஸ்தூரி சின்னையா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி சோமசுந்தரம், குளத்துப்பட்டி ஊராட்சி மன்றதலைவர்சேதுராமன்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்தையா, கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், துவார் முக்கையா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பிரதிநிதிகள் ஜலாலுதீன், நடராஜன், பேரூர் கவுன்சிலர்கள் அழகு, அமுதா மற்றும் பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன், துணை அமைப்பாளர் வீரமணி, மன்சூர், விக்னேஷ், ஆகியோர் செய்திருந்தனர்.
- மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜி.வி.சம்பத் தொடங்கி வைத்தார்
- கள்ளக்குறிச்சி சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது
வேலூர்:
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் கட்டிட பொறியாளர்களுக்கான புரோ லீக் ( ஐ.சி.பி.எல்.)என்ற கிரிக்கெட் போட்டி தொடர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வேலூர் சி.எம்.சி. மைதானத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்டது. போட்டிகளை வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜி.வி.சம்பத் தொடங்கி வைத்தார். இதில் 6 அணிகள் கலந்து கொண்டன.
கள்ளக்குறிச்சி சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் ரீஜியன் 5 அணியை வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதில் கட்டிட பொறியாளர்கள் அமைப்பு நிர்வாகிகள், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தைச் சேர்ந்த சி.புகழேந்தி, நாகசுந்தரம், ஜி.சரவணமூர்த்தி, எம்.டி.பாலச்சந்தர், ஜெ.சிவசக்தி, பி முரளிதரன். ஏ.கோகுல தாஸ், ஆர்.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சோழசிராமணியில் சோலை ஈகிள் கிரிக்கெட் கிளப்பின் 35-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சோழசிராமணி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க மாநில வர்த்தக அணி துணைத் தலைவருமான கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணியில் சோலை ஈகிள் கிரிக்கெட் கிளப்பின் 35-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சோழசிராமணி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க மாநில வர்த்தக அணி துணைத் தலைவருமான கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதியில் போட்டியில் பரமத்தி ராஜா கிரிக்கெட் கிளப் அணி முதல் பரிசு தொகையான ரூ.30,035-ம், சேலம் சகாரா கிளப் கிரிக்கெட் அணி 2-வது பரிசாக ரூ.25,035-ம், கபிலர்மலை ஆர்.எம்.சி.சி கிரிக்கெட் அணி 3-வது பரிசாக ரூ.25,035-ம், பிலிக்கல் பாளையம் டைரோ கிரிக்கெட் அணி 4-வது பரிசாக ரு.15,035-ம் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு முன்னாள் ஊராட்சித் தலைவரும், மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை அமைப்பாளருமான தளபதி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கிரிக்கெட் கிளப் செயலாளர் பரத் வரவேற்றார். கலை சுந்தரராஜன் கிரிக்கெட் கிளப் மேலாளர் நாட்ராயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய குழு தலைவர் ஜே.பி.ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், சமூக அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
- பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய லீக் போட்டிகளின் பரிசளிப்பு விழா அழகப்பா பல்கலைக்கழக செமினார் அரங்கில் நடந்தது. 31 அணிகள் 3 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.இதில் ஏ-பிரிவில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் புராடக்ட் கோவிலூர் அணி முதலிடத்தையும், லத்தீப் மெமோரியல் அணி 2-ம் இடத்தையும் வென்றது. பி-பிரிவில் தேவகோட்டை ஜூனியர்ஸ் அணி முதலிடத்தையும், சச்சின் பிரதர்ஸ் அணி 2-ம் இடத்தையும் வென்றது. சி-பிரிவில் சென்சையர் அணி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை வென்றன.
பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். புரவலர் வெங்கடாசலம் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ரவி, மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவக்குமரன், அழகப்பா உடற்கல்வி கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். சதமடித்த 18, 5 விக்கெட் வீழ்த்திய 31 வீரர்களுக்கும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக வீல்சேர் அணியில் விளையாடிய சிவகங்கை மாவட்ட வீரர்கள் சுரேஷ்குமார், ராமசந்திரன், மகளிர் வீராங்கனை பிரியதர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.






