என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே கிரிக்கெட் போட்டி தொடக்க விழா
    X

    பல்லடம் அருகே கிரிக்கெட் போட்டி தொடக்க விழா

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி துவக்க விழா நடைபெற்றது.
    • இறுதிப்போட்டி வரும் பொங்கல் அன்று நடைபெறும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு பகுதியில் கருப்பு சிங்கம் கிரிக்கெட் குழுவினர் கடந்த 13 வருடங்களாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி துவக்க விழா நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியை பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார்.

    இது குறித்து கருப்பு சிங்கம் கிரிக்கெட் அணி குழு தலைவர் இந்திர விஜய் கூறுகையில், கடந்த 13 வருடங்களாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை கள்ளிமேடு பகுதியில் நடத்தி வருகிறோம்.

    அதேபோல இந்த ஆண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது இதில் பல்லடம், திருப்பூர், உடுமலை, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொள்கின்றனர்.

    இறுதிப்போட்டி வரும் பொங்கல் அன்று நடைபெறும். அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×