குன்னூர் நகர தி.மு.க இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது. மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
குன்னூர் நகர தி.மு.க இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி
Published on

ஊட்டி

தி.மு.க இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குன்னூர் நகர தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் தலைமையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.போட்டியை நகர மன்ற தலைவர் சீலா கேத்ரின் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜா தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற வெலிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நகர செயலாளர் ராமசாமி பரிசு வழங்கினார். இரண்டாம் பரிசு கன்னி மாரியம்மன் கோவில் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை பேச்சாளர் ஜாகிர் உசேன் வழங்கினார். அருகில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர், செல்லின் ராஜ், சாதிக் பாட்சா, நகர துணை செயலாளர் முருகேசன் மற்றும் வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன், கிளை செயலாளர் சிக்கந்தர் அப்துல் காதர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்டம் மாணவர் அணி துணை அமைப்பாளர் விஜய், ராஜ், நந்தகுமார் சதீஷ்குமார், மதிவாணன், பாலச்சந்தர், மகாலி, சதீஷ் தினேஷ், வினோத்குமார், செல்வா, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com