என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அரங்கம் அதிர விசிலு பறக்கவே... தோனி என்ட்ரி-க்கு மைதானமே குலுங்கும் - ஜோ ரூட் புகழாரம்
    X

    'அரங்கம் அதிர விசிலு பறக்கவே'... தோனி என்ட்ரி-க்கு மைதானமே குலுங்கும் - ஜோ ரூட் புகழாரம்

    • கடல் போன்ற மஞ்சள் படை தோனியின் பெயரை உச்சரிக்கும்.
    • எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை மைதானத்தில் தோனி நுழைந்தால் மைதானமே அதிரும் என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ ரூட், "ஐபிஎல் போட்டியின் போது, சென்னையில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மைதானம் குலுங்குவது போலவும், அதிர்வது போலவும் உணர்வீர்கள். அரங்கமே அதிர்வுறும். கடல் போன்ற மஞ்சள் படை அவரது பெயரை உச்சரிக்கும். எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது. என்ன ஒரு அனுபவம் அது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×