search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா?- கவாஸ்கர் பதில்
    X

    தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா?- கவாஸ்கர் பதில்

    • தெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். அதற்கான உடல் தகுதியோடும் இருந்தார்.
    • விராட் கோலியும் உடல் திறன் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருபவர்.

    புதுடெல்லி:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலி இலங்கை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 113 ரன்கள் எடுத்தார். திருவனந்தபுரத்தில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 166 ரன்கள் குவித்தார். இலங்கை தொடரில் 2 செஞ்சூரி அடித்து சாதித்தார்.

    சுமார் 1000 நாட்கள் வரை சதத்தை பதிவு செய்யாமல் தடுமாறி வந்த அவர் தற்போது பேட்டிங்கில் மிகவும் சிறப்பான நிலையில் திகழ்கிறார்.

    34 வயதான விராட்கோலி சர்வதேச போட்டிகளில் 74 சதங்களை அடித்துள்ளார். அதாவது டெஸ்டில் 27 சதமும், ஒருநாள் ஆட்டத்தில் 46 செஞ்சூரியும், 20 ஓவரில் 1 சதமும் அடித்துள்ளார்.

    அதிக சதங்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கும் தெண்டுல்கர் சாதனையை தொட விராட் கோலிக்கு இன்னும் 26 செஞ்சூரிகளே தேவை. தெண்டுல்கர் 100 சதங்கள் அடித்துள்ளார்.

    இந்த நிலையில் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். அதற்கான உடல் தகுதியோடும் இருந்தார். விராட் கோலியும் உடல் திறன் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருபவர்.

    ஆண்டுக்கு 6 முதல் 7 சதங்கள் வரை விராட் கோலி பதிவு செய்தால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் 100 சதம் என்ற மைல்கல்லை தொடுவார். அதற்கு அவர் 40 வயது வரை விளையாட வேண்டும். அந்த வயதில் அவர் விளையாடினால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    Next Story
    ×