என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கம் - இந்தியாவுக்கு வங்கதேசம் கடுமையான எதிர்வினை
    X

    IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கம் - இந்தியாவுக்கு வங்கதேசம் கடுமையான எதிர்வினை

    • முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
    • ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் விளையாட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது.

    இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

    IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், ஆவேசமாக பேசிய வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும். IPLல் ஒப்பந்தம் போட்ட பிறகும், வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாட முடியாதென்றால், எப்படி வங்கதேச வீரர்களால் பாதுகாப்பாக உணர முடியும்?

    IPL போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளேன். மேலும் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசத்தையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமை மனநிலையில் இருந்து எப்போதோ விடுபட்டு விட்டோம்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×