search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crore"

    • குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.
    • பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் செலவளிப்பேன், என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்தவர் லவ்லி மோள் அச்சம்மா. இவர் வளைகுடா நாடான அபுதாபியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.

    இவர் சமீபத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி இருந்தார். இதன் குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.45 கோடி நர்சு லவ்லி மோள் அச்சம்மாவுக்கு கிடைத்தது. இதனை அறிந்த அவர் மகிழ்ச்சியில் திளைத்தார். பரிசு கிடைத்தது பற்றி அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு மாதமும் எனது கணவர் தான் லாட்டரி சீட்டு வாங்குவார். இம்முறை நான் லாட்டரி சீட்டை வாங்கி இருந்தேன். அதற்கு முதல் பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பணத்தில் எனது மைத்துனருக்கும் பங்கு கொடுப்பேன்.

    மேலும் அந்த பணத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குவேன். மீதி பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் செலவளிப்பேன், என்றார். 

    • 6592 மகளிர் சுயஉதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
    • 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.7.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி, டிச.30-

    திருச்சியில் நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடரந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றியக்குழு தலைவர்கள் செம்பனார்கோயில் நந்தினி ஸ்ரீதர், குத்தாலம் மகேந்திரன், சீர்காழி கமலஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மகளிர் திட்ட இயக்குனர் பழனி வரவேற்றார்.

    விழாவில் கலெக்டர் லவிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர் செல்வம் ஆகியோர் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கினர்.

    விழாவில் கலெக்டர் லலிதா பேசியதாவது;-

    மாவடத்தில் ஐந்து வட்டாரங்களில் 5,857 மகளிர் சுயஉதவி குழுக்களும், மயிலாடுதுறை சீர்காழி ஆகிய நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய நான்கு பேரூராட்சிகள் உள்ளிட்ட ஆறு நகர்புற அமைப்புகளில் 735 அளவிலான மகளிர் சுயஉதவி குழுக்கள் என மொத்தம் 6592 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கிட ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    விழாவில் 652 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20.99 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.7.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சுயதொழில் தொடங்கி மகளிர் சுய உதவி குழுவினர் தங்களது பொருளாதாரத்தை உய ர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது.
    • இதில் பி.டி ரகப் பருத்தி குவின்டால் குறைந்த பட்சமாக 102 ரூபாய் 17 காசுக்கும், அதிகபட்சமாக ரூ.110 ரூபாய் 99 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்து 980-க்கு விற்பனையானது.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது. ஆனால் இந்த வாரம் பருத்தி வரத்து அதிகமானதால் நேற்று (வெள்ளிக்கிழமை) வரை பருத்தி ஏலம் நடைபெற்றது.

    இந்த ஏலத்திற்கு தருமபுரி,சேலம், கொளத்தூர், கொங்கணாபுர ம், மேட்டூர், பெருந்துறை,அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 ஆயிரத்து 899 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி ரகப் பருத்தி குவின்டால் குறைந்த பட்சமாக 102 ரூபாய் 17 காசுக்கும், அதிகபட்சமாக ரூ.110 ரூபாய் 99 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்து 980-க்கு விற்பனையானது.

    இதில் கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, கொங்கணா புரம், பெருந்துறை, அந்தியூர் ஆகிய பகுதிகளை சேர்நத வியாபாரிகள் பலர் வந்து போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    நாட்டின் தலைநகர் டெல்லியில் பல்வேறு போதைப்பொருட்களை விற்று வந்த ஆப்பிரிக்க நாட்டவர் உள்ளிட்ட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். #drugcaptured
    புதுடெல்லி:

    டெல்லியை மையமாக கொண்டு போதைப்பொருட்கள் கடத்தும் கும்பல் இயங்கி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உத்தம்நகர் பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், மோகன் கார்டன் பகுதியில் உள்ள ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு போதை மருந்து விநியோகித்து வருவதாக அவர்கள் வாக்கு மூலம் அளித்தனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மோகன் கார்டன் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்தும் போதைப் பொருட்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நபர் இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மூலம் ஆப்பிரிக்காவில் இருந்து போதைப்பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதாகவும், பின்னர் இங்கு இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #drugcaptured
    ×