search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    எதுக்கு விளையாட வரனும்.. என்.சி.ஏ.விலேயே தங்கிவிட வேண்டியதுதானே.. சிஎஸ்கே வீரரை சாடிய ரவி சாஸ்திரி
    X

    எதுக்கு விளையாட வரனும்.. என்.சி.ஏ.விலேயே தங்கிவிட வேண்டியதுதானே.. சிஎஸ்கே வீரரை சாடிய ரவி சாஸ்திரி

    • மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார்.
    • அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    ஐபிஎல் 2023 தொடரில் 5-வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார். அவருடைய காயம் சற்று அதிகமாக இருப்பதால் இன்னும் ஓரிரு வாரங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    இப்படி அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    இதை இனிமேல் இந்த வழியில் பாருங்கள். அதாவது சில வீரர்கள் என்சிஏ'வில் நிரந்தரமாக குடியிருப்பவர்களாக மாறிவிட்டார்கள். விரைவில் அவர்களுக்கு அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் உரிமை கிடைக்கப் போகிறது. அப்போது தான் அவர்களால் எந்த நேரத்திலும் அங்கு செல்ல முடியும். இவ்வாறு தொடர்ந்து நடப்பது நல்லதல்ல. இது நம்ப முடியாததாக இருக்கிறது. அதாவது நீங்கள் அதிகமான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை ஆனாலும் மீண்டும் மீண்டும் காயமடைகிறீர்கள்.

    குறிப்பாக முழுமையாக நீங்கள் 4 போட்டிகளில் கூட விளையாடவில்லை. பின்னர் ஏன் என்சிஏவுக்கு செல்கிறீர்கள்? அதாவது அங்கே இருந்து தான் வந்த நீங்கள் 3 போட்டிகளில் விளையாடியதும் ஏன் மீண்டும் அங்கே செல்கிறீர்கள். எனவே என்சிஏவில் அனைத்து அம்சங்களிலும் தேர்வாகி ஃபிட்டான பின் களமிறங்கி விளையாடுகிறோம் என்பதை உங்களுக்கு நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள். இது இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் பிசிசிஐ மற்றும் பல்வேறு அணிகளின் கேப்டன்களுக்கும் கடுப்பேற்றுகிறது.

    அது மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. கடினமான காயங்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு 4 போட்டிக்கும் ஒரு முறை தசைப்பிடிப்பு காயம் ஏற்படும் போது அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் சில வீரர்கள் வேறு எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அதாவது 3 மணி நேர போட்டியில் வெறும் 4 ஓவர்கள் வீசியதும் காயமடைகிறீர்கள் என்பது அபத்தமானது.

    என்று கூறினார்.

    Next Story
    ×