என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி டிராபி 2025-26: பெங்கால் அணியில் முகமது ஷமி, ஆகாஷ் தீப்
- முகமது ஷமி இந்திய டெஸ்ட் அணியில் விளையாடாமல் உள்ளார்.
- ஆகாஷ் தீப் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
2025-26 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் பெங்கால் கிரக்கெட் சங்கம் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணியை அறிவித்துள்ளது.
இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர் அபிஷேக் பொரேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுஸ்டப் மஜும்தார், சுதீப் சட்டர்ஜி போன்ற மூத்த வீரர்களும், சுதீப் குமார் கராமி, ராகுல் பிரசாத், சவுரப் குமார் சிங், விஷால் பாட்டி போன்ற இளைஞர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
பெங்கால் அணி எலைட் குரூப் சி-யில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் குஜராத், அரியானா, சர்வீசஸ், ரெயில்வேஸ், திரிபுரா, உத்தரகாண்ட், அசாம் அணிகள் இடம் பிடித்துள்ளன. ஈடன் கார்டனில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் போட்டியில் உத்தரகாண்ட் அணியை பெங்கால் எதிர்கொள்கிறது.
ரஞ்சி டிராபில் 38 அணிகள் விளையாடுகின்றன. 32 அணிகள் எலைட் டிவிசனில் நான்கு குரூப்புகளாக பிரிக்கப்படும். 8 அணிகள் பிளேட் டிவிசனில் இடம் பெறும். எலைட் குரூப்பில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். பிளேட் டிவிசனில் இருந்து நான்கு அணிகள் நாக்அவுட் போட்டிக்கு முன்னேறும்.






