என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த சி.எஸ்.கே. வீரர் அன்ஷுல் கம்போஜ்
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- இந்திய பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயமடைந்துள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயமடைந்துள்ளதால், சி.எஸ்.கே. வீரர்இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய கம்போஜ் சிறப்பாக பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா பின் தங்கிய நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story






