என் மலர்

  நீங்கள் தேடியது "Kevin Pietersen"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சன் டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி குறித்து கணித்துள்ளார்.
  லண்டன்:

  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா - வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

  முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்து அணியா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சன் டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி குறித்து கணித்துள்ளார்.

  அவர் கூறுகையில், ஏற்கெனவே 2015-ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளே மோதின. அதில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது. தற்போதும் அந்த இரு அணிகளே டி20 இறுதிப்போட்டியிலும் மோத உள்ளன. இன்று நடக்கும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

  டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியா 2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது இருந்தது. இப்போது கோப்பையை வெல்ல இரண்டாவது வாய்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் முதன்முறையான வெளிநாட்டு வீரரான பீட்டர்சன் பட்டோடி நினைவு பேருரையை நிகழ்த்தினார். #BCCIAward
  கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் பிசிசிஐ விருதுகள் வழங்கி கவுரவிக்கும். இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.

  இந்த விழாவின்போது எம்ஏகே பட்டோடி நினைவு பேருரை நிகழ்த்தப்படும். கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்தான் பேருரை நிகழ்த்தினார். இந்த முறை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் பேரை நிகழ்த்தினார்.  இதன்மூலம் பட்டோடி நினைவு பேருரையை நிழ்த்திய வெளிநாட்டு நபர் என்ற பெருமையை பீட்டர்சன் பெற்றுள்ளார். பீட்டர்சன் உரை நிகழ்த்துவார் என்பது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பெரும்பாலானா பிசிசிஐ அதிகார்கள் அதிப்தி தெரிவித்திருந்தனர். என்றாலும், பட்டோடி நினைவு பேருரையை நிகழ்த்தியது எனக்கு பெருமை என்று பீட்டர்சன் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து உலகக் கோப்பையை நோக்கி ஓடுவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு கேடு விளைவிப்பதாக அமையும் என பீட்டர்சன் எச்சரித்துள்ளார். #ENGvIND
  2015-ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் சுற்றோடு ஏமாற்றம் அடைந்து வெளியேறியது. அடுத்த உலகக் கோப்பை தொடர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

  இதனால் உலகக் கோப்பை தொடருக்குப் பின் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருநாள் அணியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் செய்தது.

  அதன்படி மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சியடைந்தது. இதனால் விளைவாக தற்போது ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடம் பிடித்துள்ளது.

  அதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆஷஸ் தொடரை 0-4 என இழந்தது. சமீபத்தில் சொந்த மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

  இந்நிலையில் ஒருநாள் போட்டியை நோக்கி இங்கிலாந்து செல்வது, டெஸ்ட் போட்டிற்கு கேடு விளைவிக்கும் என முன்னாள் நட்சத்திர வீரரான கெவின் பீட்டர்சன் எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘எந்த திசையில் இங்கிலாந்து அணி செல்ல விரும்புகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாம் (இங்கிலாந்து அணி) டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. சொந்த மண் மற்றும் வெளியே ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளோம். சில வருடத்திற்கு முன் இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியுள்ளோம்.

  ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை இதுவரை வென்றது கிடையாது. சில வருடத்திற்கு முன்பே உலகக் கோப்பை குறித்த தகவல் வெளியானது. அதில் இருந்து இங்கிலாந்து அணி அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு கேடா முடியும். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய எங்களை போன்ற வீரர்களுக்கு இது கவலையும், விரக்தியும் அளிக்கிளது’’ என்றார்.

  கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 சதத்துடன் 8000-த்திற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். சராசரி 47.28 ஆகும்.
  ×