search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கோலி டெல்லி அணிக்காக விளையாட வேண்டிய நேரம் வந்து விட்டது.. பீட்டர்சனின் வைரல் டுவிட்
    X

    கோலி டெல்லி அணிக்காக விளையாட வேண்டிய நேரம் வந்து விட்டது.. பீட்டர்சனின் வைரல் டுவிட்

    • ஐபிஎல் தொடரில் பீட்டர்சன் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார்.
    • ஐபிஎல்லில் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்று விராட் கோலி கூறியிருந்தார்.

    ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரே அணிக்காக ஆடிவரும் ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி. ஐபிஎல் 16வது சீசனிலும் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது ஆர்சிபி அணி.

    லீக் சுற்றின் கடைசி 2 போட்டிகளிலும் சதமடித்து ஐபிஎல்லில் 7 சதங்களுடன், அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். ஐபிஎல்லில் ஆர்சிபிக்காக 237 போட்டிகளில் ஆடி 7 சதங்களுடன் 7263 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்த அவரால் ஆர்சிபி அணிக்காக ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்கமுடியவில்லை. இந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் ஆர்சிபி வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஐபிஎல்லில் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்றும், வேறு அணிக்காக ஆடுவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றும் கோலி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் விராட் கோலி டெல்லி கேப்பிடள்ஸ் அணிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    அதில், விராட் கோலியின் சொந்த ஊர் டெல்லி தான் என்ற நிலையில், அவர் டெல்லிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிடள்ஸ் அணியும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

    2008-ம் ஆண்டில் டெல்லி அணி விராட் கோலியை ஏலத்தில் எடுப்பதாக இருந்தது. ஆனால் டெல்லி அணிக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் நிலையில் பிரதீப் சங்வானை ஏலத்தில் எடுத்தது. இல்லாவிடில் விராட் கோலி டெல்லி அணிக்காகதான் விளையாடிருப்பார்.

    பீட்டர்சன் டெல்லி அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி சர்வதேச அளவில் 75 சதங்களை விளாசி, சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டிவருகிறார். சச்சின் சாதனையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×