என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பணத்தை சுற்றித் தான் இப்போதைய கிரிக்கெட் உள்ளது- இந்திய வீரர்களை விளாசிய பீட்டர்சன்
- இந்தியாவின் தோல்விக்குத் தற்கால பேட்ஸ்மேன்களின் டெக்னிக்தான் காரணம்.
- கிரிக்கெட்டில் இப்போது நிலைத்து நின்று ஆடுவதற்கோ, சுழற்பந்தை எதிர்கொள்ளும் கலைக்கோ முக்கியத்துவம் இல்லை.
கொல்கத்தா:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் பேட்ஸ்மேன்களிடம் சரியான டெக்னிக் இல்லாதது தான் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்,
இது குறித்து அவர் கூறியதாவது:-
கொல்கத்தாவில் ஆடுகளத்தைப் பார்த்தேன். ஸ்கோரைப் பார்த்தேன். முடிவையும் பார்த்தேன். இந்தியாவின் தோல்விக்குத் தற்கால பேட்ஸ்மேன்களின் டெக்னிக்தான் காரணம். இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள் அடிக்கவும், ஸ்விட்ச்-ஹிட் ஆடவும்தான் கற்றுக்கொள்கிறார்கள்.
வீரர்களுக்கு பயிற்சியில் என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். இதில் வீரர்களைக் குறை சொல்ல முடியாது, தற்கால கிரிக்கெட்டின் போக்கே இதுதான். கிரிக்கெட்டில் இப்போது நிலைத்து நின்று ஆடுவதற்கோ, சுழற்பந்தை எதிர்கொள்ளும் கலைக்கோ முக்கியத்துவம் இல்லை.
இப்போதைய கிரிக்கெட் பணத்தை சுற்றித் தான் இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆனால், நான் பேசுவேன், ஏனென்றால் அதுதான் உண்மை. வீரர்களுக்கு அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிக்க சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.
என்று கெவின் பீட்டர்சன் கூறினார்.






