search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zaheer Khan"

    • 2-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக ஜாகீர் கான் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர்.
    • அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் 2-வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.

    இது குறித்து அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:-

    கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான டோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

    ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் கூறினார்.

    கெவின் பீட்டர்சன்: ஆம்.. நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.

    ஜாகீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.

    கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.

    (தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.

    என்று பேசினார்கள். 

    • அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.
    • குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ளார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த உதவியுடன் 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் சூர்யகுமாரை அவுட்டாக்க பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் ஐடியா கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ளார். இதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் பந்து வீச தடுமாறுகிறார்கள்.

    இருப்பினும் பிட்ச்சின் ஒரு பக்கமாக வீசும் போது ஃபீல்டர்கள் இருப்பார்கள் என்பதால் டி20 கிரிக்கெட்டில் அவரை அவுட்டாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கும். ஆனாலும் லாங் ஆன், மிட் விக்கெட், கவர்ஸ் திசைக்கு மேல் என பந்தின் வேகத்தை பயன்படுத்தி பேட்டின் வேகத்தை திறந்து சூர்யா அடிப்பதால் பவுலர்கள் தடுமாறுகின்றனர்.

    அவர் தனது பீல்டர்களை தேர்வு செய்து மட்டுமல்லாமல் அவருக்கு தேவையான இடத்தை தேர்வு செய்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும் போது நீங்கள் அவருக்கு எதிராக திட்டங்களை செயல்படுத்துவது எளிதாக இருக்காது.

    எனவே நல்ல பந்துகளை வீசி அவரை அவுட்டாக்கும் வாய்ப்பை நீங்களே பெற வேண்டும். அதுவே அவரை தடுப்பதற்கான ஒரே வழியாகும். அது தான் இப்போட்டியின் இறுதியில் நடந்தது.

    இவ்வாறு ஜாகீர் கான் கூறினார்.

    • டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது.
    • டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது.

    2024 டி20 உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-

    டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கு நீங்கள் சற்று அனுபவத்துடன் செல்ல வேண்டும். அத்தொடரில் இந்திய அணியை வழி நடத்தும் பொறுப்பை ஒரு அனுபவமிக்கவரிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நீண்டகாலமாக விளையாடி வரும் அவருக்கு சூழ்நிலைகளை சமாளிப்பது, அழுத்தத்தை கையாள்வது போன்ற அம்சங்களில் அனுபவம் இருக்கிறது.

    டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது. எனவே ஒன்று நீங்கள் ரோகித் சர்மாவுடன் செல்ல வேண்டும். அல்லது ஹர்திக் பாண்ட்யா காயத்திலிருந்து எந்தளவுக்கு குணமடைந்து வருகிறார் என்பதை பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஆனாலும் உலகக்கோப்பைக்கு முன்பாக பாண்ட்யா அதிகப்படியான போட்டிகளில் விளையாடியிருக்க மாட்டார். எனவே அந்த முடிவும் பின்னடைவாகவே இருக்கும்.

    என்று கூறினார்.

    • ஆண்டர்சன் பவுலிங் ஸ்டைல் மற்றும் முறை ஆகியன முற்றிலும் மாறுபட்டது.
    • அவர் இங்கிலாந்தில் வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 விக்கெட் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.

    இந்நிலையில் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் மிரட்டும் ஆண்டர்சனை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலும் ஸ்விங் செய்யும் ஜஹீர் கான் என்னைப் பொறுத்த வரை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆண்டர்சன் பவுலிங் ஸ்டைல் மற்றும் முறை ஆகியன முற்றிலும் மாறுபட்டது. அவர் இங்கிலாந்தில் வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடினார். ஒருவேளை இந்தியாவில் அவர் விளையாடியிருந்தால் இந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்திருக்க முடியாது. எனவே அவரை விட ஜாகிர் கான் சிறந்தவர்.

    மேலும் 2014 வெலிங்டன் போட்டியில் கேட்ச் விட்டதற்காக தம்முடைய குருவான ஜாகீர் கானை அனைவரும் நினைப்பது போல் திட்டவில்லை என்று தெரிவித்தார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    அன்றைய நாளில் என்னை நானே திட்டிக் கொண்டேன். மாறாக கேட்ச் விட்டதற்காக யாரையும் திட்டவில்லை. அந்த நிலையில் என்னுடைய குருவான அவரை நான் திட்டுவேனா? அப்படி நான் கனவில் கூட நினைத்ததில்லை. இருப்பினும் அந்த போட்டியில் மெக்கல்லம் பெரிய ரன்களை அடித்ததால் நான் கடுப்பானேன். ஜஹீர், ஷமி மற்றும் நான் ஃபிளாட்டான பிட்ச்சை கொண்ட அந்தப் போட்டியில் ஒவ்வொரு 4 ஓவருக்கு ஒருமுறை மாற்றி மாற்றி வீசியது விரக்தியை ஏற்படுத்தியது.

    என்று கூறினார்.

    • உம்ரான் மிகவும் திறமை வாய்ந்தவர்.
    • உம்ரான் மாலிக் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க விரும்பினால் அவர் எவ்வாறு திறமையை முன்னோக்கி எடுத்து செல்கிறார் என்பதில் தான் இருக்கிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இப்போட்டி தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் உம்ரான் மாலிக் அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறியதாவது:-

    இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு நியூசிலாந்து போட்டி தொடர் முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அது அவரது வளர்ச்சிக்கு உதவும்.

    உலகின் மற்ற பெரிய அணிகளுடன் போட்டி போடுவதற்கு வேகப்பந்து வீச்சில் இந்தியாவுக்கு பல்வேறு பரிமானங்கள் தேவை. இடது கை பந்து வீச்சாளர், பந்தை ஸ்விங் செய்யக்கூடிய ஒருவர் வேண்டும். பந்து வீச்சு வரிசையில் பல்வேறு வகைகளை பயன்படுத்த வேண்டும்.

    உம்ரான் மிகவும் திறமை வாய்ந்தவர். நியூசிலாந்து தொடரில் அவர் வாய்ப்பு பெற வேண்டும். உம்ரான் மாலிக் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க விரும்பினால் அவர் எவ்வாறு திறமையை முன்னோக்கி எடுத்து செல்கிறார் என்பதில் தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெளிநாட்டு 20 ஓவர் லீக் தொடர்களில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்துக்கு ஜாகீர்கான், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கூறும் போது, இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடுவதற்காக எந்த காரணத்தையும் பார்க்கவில்லை. உள்நாட்டில் தற்போது இருப்பதும் வலுவான கட்டமைப்பு தான். நல்ல வீரர்களை உருவாக்குவதற்கு நம்மிடம் போதுமான வழிகள் உள்ளது என்றனர்.

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் 4-வது இடத்திற்கு டோனிதான் சரியான நபர் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார். #MSDhoni #TeamIndia
    இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியா இன்னும் உலகக்கோப்பைக்கான அணியை கண்டறியவில்லை. குறிப்பாக 4, 5 மற்றும் 6-வது இடத்திற்கு சரியான நபரை அடையாளம் காணவில்லை. ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரெய்னா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இருந்த போதிலும் உறுதியாக இவர்தான் இந்த இடத்தில் விளையாடுவார் என்று குறிப்பிட முடியவில்லை.

    குறிப்பாக 4-வது இடம் இன்னும் காலியாகவே இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் டோனி 4-வது இடத்திற்கு சரியான நபர் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஜாகீர்கான் கூறுகையில் ‘‘யாராவது ஒருவர் 4-ம் இடத்தில் களம் இறங்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அது எம்எஸ் டோனியாகவே இருக்க முடியும். இந்திய அணியின் தோல்விகளைப் பார்த்தீர்கள் என்றால், நல்ல தொடக்கம் இல்லாத போட்டிகளில் தோல்விகளை சந்தித்திருக்கும். மோசமான தொடக்கத்திலிருந்து பின்னால் மீள முடிவதில்லை.



    எனவே 4-ம் நிலையில் அனுபவமிக்க வீரர் இறங்க வேண்டும். அந்த நிலையில் நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து வெற்றிப்பாதைக்குத் திருப்பும் வீரர் தேவை. அவர் அவருடன் தனக்கு பின்னால் வரும் வீரர்களையும் தன்னுடன் சேர்த்து கடைசி வரை கொண்டு செல்பவராக இருக்க வேண்டும். இதற்கு தோனியை விட்டால் வேறு ஆளில்லை” என்றார்.
    இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார். #ENGvIND #TeamIndia #ZaheerKhan
    மும்பை:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றின.

    இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்தியா எசக்ஸ் அணியுடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது.

    இந்த நிலையில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    இந்தியாவின் பவுலிங் வரிசை மிகவும் பலமாக இருக்கிறது. உமேஷ் யாதவ் நன்றாக வீசுகிறார். இஷாந்த் சர்மா, சீனியர் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமியும் நல்ல சாதனையில் இருப்பார்கள். புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் முதல் டெஸ்டில் ஆடாவிட்டாலும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு நன்றாகவே இருக்கிறது.

    5 டெஸ்ட் தொடர் என்பதால் நீண்ட நாட்கள் நடைபெறும். அனைத்து பவுலர்களும் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருப்பது அவசியம். இந்த டெஸ்ட்டில் தொடர்ந்து இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது‌ ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர் ஆகிய 5 வேகப்பந்து வீரர்கள் உள்ளனர். இதில் பும்ரா உடல் தகுதியுடன் இல்லை. இஷாந்த், உமேஷ், முகமது ‌ஷமி ஆகிய 3 பேர், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வலியுறுத்தி உள்ளார். #ENGvIND #TeamIndia #ZaheerKhan
    ×