search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TeamIndia"

    • 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    முதலில் விளையாடிய வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    மழையால் முதல் நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    மழை இல்லாததால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் அரை சதம் விளாசினார். 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்கதேச அணி 74.2 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை கடந்து சாதனை படைத்தனர். அப்போது, ரோகித் சர்மா 23 ரன்களில் அவுட்டானார்.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் அவுட்டானார்.

    இந்நிலையில், அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    • இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நேற்று நியமிக்கப்பட்டார்.
    • பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அடுத்த பயிற்சியாளர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் உலா வந்தன.

    அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    அதனை தொடர்ந்து கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று தெரிவித்தார்.

    பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார். மேலும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக எல் பாலாஜி, ஜாகீர் கான், வினய் குமார் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜியை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் வினய் குமாரை பவிலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

    ×