என் மலர்
நீங்கள் தேடியது "அபிஷேக் நாயர்"
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.
- தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து கொல்கந்தா அணி நிர்வாகம் நீக்கியது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து கொல்கந்தா அணி நிர்வாகம் நீக்கியது. அவருக்கு பதிலாக அபிஷேக் நாயரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதன் விருப்பத்தை அபிஷேக் நாயர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா ஏற்கனவே, கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
அவர் பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
- கொல்கத்தா அணியில் ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.
- சந்திரகாந்த் பண்டிட் தலைமை பயிற்சியாளர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் அபிஷேக் நாயரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் விருப்பத்தை அபிஷேக் நாயர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அபிஷேக் சர்மா ஏற்கனவே, கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
தற்போது பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இரண்டு பதவிகளையும் ஒரே நேரத்தில் சமாளித்துக் கொள்வாரா? என்பது தெரியவில்லை.
- இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது.
- அவருடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை பிசிசிஐ முறித்துள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரை 1-3 என இழந்தது.
இதனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. தோல்வி குறித்து பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை தேர்வாளர் அகர்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.
பின்னர் ஐபிஎல் தொடங்கியதால் ஆலோசனைக்குப் பின் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் ஆகியோரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. அவர்களுடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை முறித்துள்ளது.
இதனையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அபிஷேக் நாயர் இணைந்துள்ளார். கே.கே.ஆர். ஜெர்சியில் இருக்கும் அபிஷேக் நாயரின் புகைப்படத்தை கே.கே.ஆர். அணி பகிர்ந்துள்ளது.
இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு கே.கே.ஆர். அணியை விட்டு வெளியேறிய அபிஷேக் நாயர் மீண்டும் கே.கே.ஆர். அணியின் இணைந்துள்ளார்.
- இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நேற்று நியமிக்கப்பட்டார்.
- பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அடுத்த பயிற்சியாளர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் உலா வந்தன.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
அதனை தொடர்ந்து கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று தெரிவித்தார்.
பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார். மேலும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக எல் பாலாஜி, ஜாகீர் கான், வினய் குமார் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜியை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் வினய் குமாரை பவிலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.






