என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராகிறார் அபிஷேக் நாயர்
    X

    கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராகிறார் அபிஷேக் நாயர்

    • கொல்கத்தா அணியில் ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.
    • சந்திரகாந்த் பண்டிட் தலைமை பயிற்சியாளர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    இதனால் தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் அபிஷேக் நாயரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் விருப்பத்தை அபிஷேக் நாயர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அபிஷேக் சர்மா ஏற்கனவே, கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    தற்போது பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இரண்டு பதவிகளையும் ஒரே நேரத்தில் சமாளித்துக் கொள்வாரா? என்பது தெரியவில்லை.

    Next Story
    ×