என் மலர்
கிரிக்கெட் (Cricket)

KKR அணியின் புதிய பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.
- தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து கொல்கந்தா அணி நிர்வாகம் நீக்கியது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து கொல்கந்தா அணி நிர்வாகம் நீக்கியது. அவருக்கு பதிலாக அபிஷேக் நாயரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதன் விருப்பத்தை அபிஷேக் நாயர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா ஏற்கனவே, கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
அவர் பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.






