search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    திறமையை வெளிப்படுத்த நியூசிலாந்து தொடர் உம்ரான் மாலிக்குக்கு உதவியாக இருக்கும்- ஜாகீர்கான்
    X

    திறமையை வெளிப்படுத்த நியூசிலாந்து தொடர் உம்ரான் மாலிக்குக்கு உதவியாக இருக்கும்- ஜாகீர்கான்

    • உம்ரான் மிகவும் திறமை வாய்ந்தவர்.
    • உம்ரான் மாலிக் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க விரும்பினால் அவர் எவ்வாறு திறமையை முன்னோக்கி எடுத்து செல்கிறார் என்பதில் தான் இருக்கிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இப்போட்டி தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் உம்ரான் மாலிக் அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறியதாவது:-

    இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு நியூசிலாந்து போட்டி தொடர் முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அது அவரது வளர்ச்சிக்கு உதவும்.

    உலகின் மற்ற பெரிய அணிகளுடன் போட்டி போடுவதற்கு வேகப்பந்து வீச்சில் இந்தியாவுக்கு பல்வேறு பரிமானங்கள் தேவை. இடது கை பந்து வீச்சாளர், பந்தை ஸ்விங் செய்யக்கூடிய ஒருவர் வேண்டும். பந்து வீச்சு வரிசையில் பல்வேறு வகைகளை பயன்படுத்த வேண்டும்.

    உம்ரான் மிகவும் திறமை வாய்ந்தவர். நியூசிலாந்து தொடரில் அவர் வாய்ப்பு பெற வேண்டும். உம்ரான் மாலிக் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க விரும்பினால் அவர் எவ்வாறு திறமையை முன்னோக்கி எடுத்து செல்கிறார் என்பதில் தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெளிநாட்டு 20 ஓவர் லீக் தொடர்களில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்துக்கு ஜாகீர்கான், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கூறும் போது, இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடுவதற்காக எந்த காரணத்தையும் பார்க்கவில்லை. உள்நாட்டில் தற்போது இருப்பதும் வலுவான கட்டமைப்பு தான். நல்ல வீரர்களை உருவாக்குவதற்கு நம்மிடம் போதுமான வழிகள் உள்ளது என்றனர்.

    Next Story
    ×