search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Athiya Shetty"

  • தம்பதியருக்கு பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையல்ல.

  நடிகை அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கும் ஜனவரி 23-ந் தேதி அன்று கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஐபிஎல் போட்டிக்கு பிறகு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தம்பதியருக்கு பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள ஆடம்பர வீடு (50 கோடி) முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து ஆடம்பரமான கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் பைக்குகள் வரை புதுமணத் தம்பதிகளுக்கு அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமண பரிசு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் எதுவுமே உண்மை இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

  இது குறித்து அதியா ஷெட்டி குடும்பத்தினர் கூறியதாவது:-

  வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையல்ல. இது போன்ற தவறான தகவல்களை பொதுகளத்தில் வெளியிடும் முன் எங்களுடன் விவரங்களை உறுதிப்படுத்துமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

  இது சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நிறுத்தும் என நம்புகிறோம்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் லோகேஷ் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நடக்கிறது.
  • இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்.

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல்.

  இவர் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை காதலித்து வருகிறார்.

  இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ராகுல் ஆடவில்லை. சொந்த காரணங்களுக்காக அவர் விலகி இருந்தார்.

  இந்த நிலையில் கே.எல்.ராகுல் நாளை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் திருமணம் குறித்த தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

  கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நாளை நடக்கிறது. இதற்கான மெஹந்தி விழா மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் இன்று நடந்தது.

  மலைவாசஸ்தலமான மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் லோகேஷ் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நடக்கிறது.

  இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். மேலும் திருமணத்தில் பங்கேற்பவர்கள் யாரும் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சல்மான்கான், அக்ஷய்குமார், கிரிக்கெட் வீரர்கள் டோனி, விராட் கோலி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  2023 ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு பாலிவுட், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்காக மும்பையில் பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  ராகுல் திருமணம் செய்ய இருக்கும் அதியா ஷெட்டி 2015 முதல் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

  • மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.
  • இன்னும் மூன்று மாதங்களில் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.

  காதலியை கரம்பிடிக்கும் கேஎல் ராகுல்- திருமணம் தேதியை சூசகமாக அறிவித்த சுனில் ஷெட்டிபிரபல பாலிவுட் வில்லன் நடிகரின் மகளை காதலித்து வரும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

  இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்து வருபவர் கே.எல்.ராகுல். கர்நாடகாவை சேர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு காதல் வதந்திகளில் சிக்கி உள்ளார். கே.எல்.ராகுல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நிதி அகர்வால் உடன் டேட்டிங் செய்து வந்தார். இதைவைத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின. பின்னர் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

  இதையடுத்து கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியுடன் நெருங்கி பழகி வந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சுனில் ஷெட்டியின் மகள் தான் அதியா ஷெட்டி. கே.எல்.ராகுல் உடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, அவருடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த அதியா ஷெட்டி, கடந்த ஆண்டு தங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தார்.

  இந்நிலையில், தற்போது இந்த ஜோடியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.

  இதுகுறித்த சூசகமான அறிவிப்பை நடிகர் சுனில் ஷெட்டியும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். பட விழா ஒன்றில் கலந்துகொண்ட சுனில் ஷெட்டியிடம் உங்கள் மகளின் திருமணம் எப்போது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இன்னும் மூன்று மாதங்களில் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார். இதன்மூலம் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் ஜனவரி மாதம் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

  • 3 போட்டிகளில் சொதப்பிய ராகுல் 4-வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார்.
  • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இன்று பிறந்தநாள்.

  ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதியில் இந்திய அணி இடம் பெற நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

  இதனால் 2007-க்குப்பின் 2-வது உலக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் சொதப்பிய ராகுல் 4-வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார்.

  இந்நிலையில் இன்று அவரது காதலியான அதியா ஷெட்டிக்கு இன்ஸ்ட்கிராமில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் (ஜோக்கர் பொம்மை போடப்பட்டுள்ளது) நீ அனைத்தையும் சிறப்பாய் மாற்றிவிட்டாய் என பதிவிட்டிருந்தார்.


  மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கிரிக்கெட் வீரர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
  • இந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 4 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.

  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விளங்குபவர் கேஎல் ராகுல். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருடன் ஹிந்தி நடிகையான அதியா ஷெட்டியுடன் இணைத்து பல வதந்திகள் வந்த நிலையில் அதியா ஷெட்டியும் கே.எல்.ராகுலும் தங்களுடைய உறவைப் பற்றி வெளிப்படையாகக் கூறினர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.


  இந்நிலையில் அதியா ஷெட்டியும் கேஎல் ராகுலும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டிராகிராமில் அதியா ஷெட்டி பதிவு செய்தார். மிகவும் பிடித்தமான ஒன்று என அதில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக கேஎல் ராகுல் இதய எமோஜியை பதிவிட்டார். இந்த புகைப்படத்தை லைக் செய்து கிரிக்கெட் வீரர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


  கிரிக்கெட் வீரரான குர்ணால் பாண்ட்யா, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அன்பை வெளிப்படுத்தும் இதய எமோஜிக்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 4 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.

  ×