என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

வீடியோ: ராகுல்- அதியா தம்பதிக்கு பெண் குழந்தை: தாலாட்டுடன் வாழ்த்து தெரிவித்த டெல்லி வீரர்கள்
- கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.
- இந்த தம்பதிக்கு டெல்லி அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் 2023 ஜனவரி 23 அன்று நடிகை அதியா ஷெட்டியை (நடிகர் சுனில் ஷெட்டியின் மகள்) திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு நேற்று (மார்ச் 24, 2025) பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த கேஎல் ராகுலுக்கு டெல்லி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் இணைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2013-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியுடன் தொடங்கிய கேஎல் ராகுலின் ஐபிஎல் பயணம், பல அணிகளுக்காக (சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) விளையாடியுள்ளார். நடப்பு ஆண்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக (ரூ. 14 கோடி) விளையாட உள்ளார்.






