என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் தொடர் முடிவடைவதற்குள் நானும் கே.எல். ராகுலும் நண்பர்களாகி விடுவோம்: பீட்டர்சன்
- சமூக வலைத்தளத்தில் கே.எல். ராகுல் உடன் என்னுடைய நட்பு எப்படி உள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.
- அதை மேம்படுத்தி வருகிறேன். சிறப்பாக அமைந்து வருகிறது.
ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல். ராகுல் உள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆலோசகராக உள்ளார். இவர் ஏற்கனவே டெல்லி அணிக்காக விளையாடியவர்.
ஐபிஎல் கிரிக்கெட் இல்லாத நேரத்தில் பீட்டர்சன் வர்ணனையாளராக செயல்படுவார். வீரர்களின் ஆட்டம் குறித்து விமர்சிப்பார். அப்படி கே.எல். ராகுல் குறித்து விமர்சித்துள்ளார். அதற்கு கே.எல். ராகுலும் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போது கெவின் பீட்டர்சன் ஒரு வாரம் மாலத்தீவுக்கு சுற்றுலா செய்திருந்தது. இது குறித்து கே.எல். ராகுல் கிண்டல் செய்திருந்தார்.
இருவருக்கும் இடையில் மிகப்பெரிய நட்பு என்பதெல்லாம் கிடையாது. ஆனால் டெல்லி அணி சிறப்பாக செயல்பட கே.எல். ராகுலின் பேட்டிங் முக்கிய காரணமாக இருக்கிறது. கே.எல். ராகுல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் கெவிட் பீட்டர்சன் அவருக்கு ஆலோசனை வழங்குகிறார். இதனால் ஆடுகளத்திற்கு வெளியில் அவர்களின் சந்திப்பு நீண்ட நேரம் நடக்கிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிவடைவதற்குள் நாங்கள் நண்பர்களாகிவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பீட்டர்சன் கூறுகையில் "சமூக வலைத்தளத்தில் கே.எல். ராகுல் உடன் என்னுடைய நட்பு எப்படி உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அதை மேம்படுத்தி வருகிறேன். சிறப்பாக அமைந்து வருகிறது. முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த தொடர் முடிவடைவதற்குள் நண்பர்களாகிவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.






