என் மலர்
நீங்கள் தேடியது "Kane Williamson"
- உலகளாவிய சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளை டாம் மூடி இனிமேல் கவனிப்பார்
- லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார்
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உலகளாவிய கிரிக்கெட் இயக்குநராக டாம் மூடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் , SA20 உள்ளிட்ட உலகளாவிய சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளை டாம் மூடி இனிமேல் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாம் மூடியின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.
- 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். மொத்தமாக, அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். இருப்பினும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள கேன் வில்லியம்சன் 18 அரை சதத்துடன் 2,575 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார்.
224 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தற்போது வரை 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போட்டியில் களமிறங்கிய கேன் வில்லியம்சன் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். தனது 15 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக கேன் வில்லியம்சன் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் தொடரில் 2015-ம் ஆண்டு அறிமுகமாகினார்.
- 2025 சீசனுக்கு மெகா ஆக்சனில் எந்த அணியாலும் வில்லியம்சன் தேர்வு செய்யப்படவில்லை.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். மொத்தமாக, அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அவர் ஐபிஎல் தொடரில் 2015-ம் ஆண்டு அறிமுகமாகி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) மற்றும் குஜராத் டைடன்ஸ் (GT) அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
அவர் சமீபத்திய 2024 சீசனில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் விளையாடினார் (மொத்தம் 27 ரன்கள்), மேலும் 2025 சீசனுக்கு மெகா ஆக்சனில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாத நிலையில் லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா விளையாட உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணிக்காக நம்பமுடியாத விஷயங்களை ரோகித் சர்மா செய்துள்ளார் என நியூசிலாந்து அணி வீரர் கனே வில்லியம்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா விளையாட்டின் ஜாம்பவான். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக நம்பமுடியாத விஷயங்களைச் செய்துள்ளார். மேலும் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்.
என வில்லியம்சன் கூறினார்.
- அவர் தனது அணியில் எந்தவொரு நியூசிலாந்து வீரருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை.
- கேப்டனாக ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி 21ஆம் நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுத்துள்ளார்.
அவர் தனது அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 4 வீரர்கள், இந்தியாவைச் சேர்ந்த 3 வீரர்கள், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 2 பேர், இலங்கை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா 1 வீரரை இந்த அணியில் சேர்த்துள்ளார். அதேசமயம் அவர் தனது அணியில் எந்தவொரு நியூசிலாந்து வீரருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை.
அவரது அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் சேவாக் மற்றும் அஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடனை தேர்தெடுத்துள்ளார்.
மூன்றாம் வரிசையில் ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்ததுடன் இந்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளார்.
4-ம் வரிசையில் சச்சின் டெண்டுகரையும், 5-ம் வரைசயில் ஸ்டீவ் ஸ்மித், 6-ம் இடத்தில் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனியை தேர்வு செய்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளராக டேல் ஸ்டெய்ன், கிளென் மெக்ராத், ஷோயப் அக்தர் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சாளராக முத்தையா முரளிதரனையும் சேர்த்துள்ளார்.
கேன் வில்லியம்சன் தேர்வு செய்த சிறந்த டெஸ்ட் லெவன்:
மேத்யூ ஹைடன், வீரேந்தர் சேவாக், ரிக்கி பாண்டிங் (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித், ஏபி டிவில்லியர்ஸ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டேல் ஸ்டெயின், ஷோயப் அக்தர், க்ளென் மெக்ராத், முத்தையா முரளிதரன்.
- கேன் வில்லியம்சன் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.
- கடந்த சில ஆண்டுகளில் ஐதராபாத், குஜராத் அணிக்காக கேன் வில்லியம்சன் ஆடியுள்ளார்.
நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார். கடந்த சில ஆண்டுகளில் அவர் ஐதராபாத், குஜராத் அணிக்காக ஆடியுள்ளார்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் வரும் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் வர்ணனை செய்ய உள்ளார்
இதன்மூலம் கிரிக்கெட்டில் முதல் முறையாக வர்ணனையாளராக கேன் வில்லியம்சன் அறிமுகமாகிறார்
- எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது.
- டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி அரையிறுதியில் தோற்று வெளியேறின. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து செல்ல உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் செயல்படுவார். இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக வில்லியம்சன் தொடர்கிறார். டிரண்ட் போல்ட் மற்றும் கப்திலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவுடனான தொடர் குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது. டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார். அவரை மீண்டும் நியூசிலாந்து அணியில் பார்ப்போம் என நம்புகிறேன்.
இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.
- வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் நியூசிலாந்து அணியில் இடம் பெறுகிறார்.
- ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைகிறார்.
நேப்பியர்
நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மருத்துவரை சந்திப்பதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது முழங்கை வலி பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
எங்கள் வீரர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை.
- இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.
வெலிங்டன்:
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். புதிய கேப்டனாக சவுதி பொறுப்பேற்கிறார். 346 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள சவுதி, 22 முறை டி20 அணியை வழிநடத்தியுள்ளார். இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். அவர் நியூசிலாந்தின் 31வது டெஸ்ட் கேப்டனாவார்.
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து கேன் வில்லியம்சன் கூறும்போது, அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது இதுதான் சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்ச நிலையாகும். டெஸ்டில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன்.
எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவுக்கான நேரம் சரியானது என்று உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். வில்லியம்சன் 2016 இல் பிரெண்டன் மெக்கல்லத்திடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து 38 போட்டிகளின் நியூசிலாந்து (22 வெற்றி, 8 டிரா, 10 தோல்வி) டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 311 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது.
- நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 61 ரன் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கராச்சி:
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
174 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் நௌமன் அலி, பாபர் அசாம் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு சர்ப்ராஸ் கான் ஒத்துழைப்பு கொடுத்தார். சர்ப்ராஸ் கான் 53 ரன்னிலும், ஆகா சல்மான் 6 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாம் உல் ஹக் 96 ரன்னில் அவுட்டானார். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 206 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவுத் ஷகீல், வாசிம் ஜுனியர் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 71 ரன்களை எடுத்தபோது பிரிந்தது. வாசிம் ஜுனியர் 43 ரன்னில் அவுட்டனார்.
இறுதியில், பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஷகீல் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அடித்து ஆடி வெற்றி பெற வேண்டும் என அந்த அணி வீரர்கள் விளையாடினர்.
இறுதியில், நியூசிலாந்து 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. பிரேஸ்வெல் 3 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் 35 ரன்னும், கான்வே 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 2-ம் தேதி தொடங்குகிறது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
- டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்தார்.
வெலிங்டன்:
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து விளையாடியது.
வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 258 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார். தனது 26-வது சதத்தை (92 டெஸ்ட்) பூர்த்தி செய்தார். அவர் 132 ரன் எடுத்து (282 பந்து, 12 பவுண்டரி) அவுட் ஆனார்.
2-வது இன்னிங்சில் வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். அவர் டெஸ்டில் 7,787 ரன் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ரோஸ் டெய்லர் 7,683 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.






