search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 match"

    • டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டிர்லிங் படைத்தார்.
    • இவருக்கு அடுத்த இடத்தில் பாபர் அசாம் 395 பவுண்டரிகள் அடித்துள்ளார்.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

    இதில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் அடித்த 2 பவுண்டரிகள் சேர்த்து இதுவரை டி20 போட்டிகளில் அவர் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.

    டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களின் பட்டியல் வருமாறு:

    பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள்

    பாபர் அசாம் - 395 பவுண்டரிகள்

    விராட் கோலி - 361 பவுண்டரிகள்

    ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள்

    டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள்.

    • அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
    • இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.

    இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பவுலிங் தேர்வு செய்தார்.

    இதையடுத்து அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    • முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது.
    • இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    ஐந்து 20 ஓவர் போட்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.

    • இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
    • ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்தநிலையில் 2வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

    அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இதற்கிடையே, இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக சாஹல் இடம் பெற்றுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனதன் மூலம் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3 முறை ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. #INDvAUS
    பெங்களூர்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் தோற்று இந்தியா ‘ஒயிட்வாஷ்’ ஆனது.

    20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடமும், 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் 0-2 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி இருந்தது. #INDvAUS
    ஆஸ்திரேலியா அணி எங்களைவிட அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார். #ViratKohli #INDvAUS
    பெங்களூர்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 72 ரன் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா, மேக்ஸ்வெல் (113 ரன்) சதத்தால் 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது.

    இதன் மூலம் 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தோல்வி குறித்து கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா அணி எங்களைவிட அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டது. வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி. பெரும்பாலான மைதானங்களில் 190 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான்.

    ஆனால் இரவு நேரத்தில் பனி பொழிவு அதிகமாக இருக்கும் போதும், மேக்ஸ்வெல் போன்ற வீரர் அதிரடியாக விளையாடும் போதும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

    நாங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். அவர்கள் நெருக்கடி சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுகிறார்கள். என்பதை பார்க்கிறோம். அடுத்த ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறோம்.

    அதில் பல முயற்சிகளை செய்து பார்ப்போம். இது அவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #INDvAUS #ViratKholi
    20 ஓவர் சர்வதேச போட்டியில் இந்திய அணி தனது கடைசி பந்தில் நான்கு முறை தோல்வியை தழுவி உள்ளது. #INDvAUS #AUSvIND
    20 ஓவர் சர்வதேச போட்டியில் இந்திய அணி தனது கடைசி பந்தில் தோல்வியை தழுவியது 4-வது முறையாகும்.

    இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் (வெலிங்டன்), 2010-ல் இலங்கையிடமும் (கிராஸ் ஐலெட்), 2014-ம் ஆண்டு இங்கிலாந்திடமும் (மும்பை) கடைசி பந்தில் இந்திய அணி தோற்று இருந்தது. #INDvAUS #AUSvIND
    அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. #AFGvIRE #HazratullahZazai #RashidKhan
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது  டி20 போட்டி இன்று டேராடூனில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அயர்லாந்து அணி பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் விக்கெட்டாக உஸ்மான் கனி 73 ரன்கள் எடுத்து வெளியேறினார்.



    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா சரவெடியாக வெடித்தார். அவர் 62 பந்துகளில் 16 சிக்சர், 11 பவுண்டரி என அடித்து 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான பால் ஸ்டிர்லிங் 50 பந்தில் 91 ரன் எடுத்து அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதைத்தொடர்ந்து 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 4 ஓவரில் 25 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். #AFGvIRE #HazratullahZazai #RashidKhan
    அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ஹஸ்ரத்துல்லா அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் 278 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது. #AFGvIRE #HazratullahZazai
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று டேராடூனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அயர்லாந்து அணி பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

    முதல் விக்கெட்டாக உஸ்மான் கனி 73 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 236 ஆக இருந்தது.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா சரவெடியாக வெடித்தார். அவர் 62 பந்துகளில் 16 சிக்சர், 11 பவுண்டரி என அடித்து 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது. #AFGvIRE #HazratullahZazai
    இந்திய அணிக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #NZvIND #INDvNZ #DarylMitchell #BlairTickner
    வெலிங்டன்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி நடக்கிறது. பிப்ரவரி 6, 8 மற்றும் 10-ந்தேதிகளில் இந்த போட்டி நடக்கிறது.

    இதற்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. டேரியல் மிக்சேல், பிளேயர், டிக்ளேர் ஆகிய 2 புதுமுக வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணி வருமாறு:-

    வில்லியம்சன் (கேப்டன்), கிரான்ட் ஹோம், பிரேஸ்வெல், டெய்லர், குப்தில், ஸ்காட், டேரியல் மிக்சேல், காலின் முன்ரோ, சான்ட்னெர், சவுத்ரி, ஸ்காட் குக்ஜிலியின், டிம் சிபெர்ட், பெர்குசன் (முதல் 2 போட்டி), பிளேயர் டிக்னெர் (3-வது போட்டி மட்டும்). #NZvIND #INDvNZ #DarylMitchell #BlairTickner
    டாக்காவில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் வங்காள தேசத்தை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #BANvWI
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. 

    டாஸ் வென்ற வங்காள தேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லெவிஸ், ஷாய் ஹோப் இறங்கினர்.

    இதில் லெவிஸ் அதிரடி காட்டினார். அவர் 36 பந்துகளில் 8 சிக்சர், 6 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    அவருக்கு ஷாய் ஹோ சிறிது ஒத்துழைப்பு கொடுத்து 23 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். நிகோலஸ் பூரன் 29 ரன்னில் அவுட்டானார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    வங்காள தேசம் சார்பில் ஷாகிப் அக் ஹசன், முஸ்தாபிசுர் ரகுமான், மொகமதுல்லா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. அந்த அணியில் லித்தன் தாஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி வங்காள தேச வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், வங்காள தேசம் அணி 17 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமோ பவுல் 5 விக்கெட்டும், பேபியன் ஆலன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 50 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #BANvWI
    ஒட்டு மொத்த திறமை அளவில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியே சிறந்தது என இந்திய கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

    சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது.

    ஷார்ட் 29 பந்தில் 33 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்னும் (4 பவுண்டரி) கேரி 19 பந்தில் 27 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

    குருணால் பாண்டியா 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 165 ரன் இலக்கை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது.

    கேப்டன் விராட் கோலி 41 பந்தில் 61 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) தவான் 22 பந்தில் 41 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 22 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்), ரோகித்சர்மா 16 பந்தில் 23 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஆடம் ஜம்பா, ஸ்டார்க், மேக்ஸ்வேல், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. பிரிஸ்பேனில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. மெல்போர்னில் நடந்த 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவை விட நாங்களே திறமையில் சிறந்து விளங்கினோம். பந்து வீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியுடன் செயல்பட்டனர். இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் வரை குவித்து இருக்கலாம் ஆனால் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 164 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விட்டனர். இந்த 15 ரன் இடைவெளி மிக முக்கிய பங்கு வகித்தது.

    எங்களது தொடக்க வீரர்கள் (ரோகித் சர்மா, தவான்) தொடக்கத்தில் அதிரடியாக ஆடியதால் எளிதாக அமைந்தது. முடிவில் தினேஷ் கார்த்திக் மிக நேர்த்தியாக விளையாடினார். நானும், அவரும் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் வெற்றி எளிதானது.

    ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஜம்பா சிறப்பாக வீசினார்கள். ஆனால் ஒட்டு மொத்த திறமை அளவில் நாங்களே சிறந்து விளங்கியதாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும் போது “பவர் பிளேயில் இந்திய அணியின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. ரோகித்தும், தவானும் முற்றிலும் மாறுபட்ட பேட்ஸ்மேன்கள். நாங்கள் கடைசிவரை போராடினோம்“ என்றார்.

    இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்டில் மோதுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது.

    அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய லெவனுடன் மோதும் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நாளை மறுநாள் தொடங்குகிறது. #AUSvIND #ViratKohli
    ×