என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guard of honour"

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெறுகிறார்.
    • இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அந்த்ரே ரஸல். 37 வயதான இவர், ரஸல் 2019ஆம் ஆண்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 1078 ரன்கள் அடித்துள்ளார். 61 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    ரஸல் அவருடைய சொந்த ஊரான ஜமைக்காவில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

    தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.

    இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், ரஸல் ஓய்வு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாதிப்ப ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதிலேயே ஓய்வை முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஸல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1034 ரன்கள் அடித்துள்ளார். 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    அடுத்த தலைமுறை கரீபியன் கிரிக்கெட்டர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் வகையில், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை உயரிய நிலையில் முடிக்க விரும்புகிறேன் என ரஸல் தெரிவித்துள்ளார்.

    அரசுமுறை பயணமாக ஜெர்மனி நாட்டுக்கு சென்ற ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் வீரர்கள் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #NirmalaSitharaman
    பெர்லின்:

    இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நான்கு நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார்.

    முதல் கட்டமாக ஜெர்மன் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி நிர்ம்லா சீதாராமனுக்கு அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் வீரர்கள் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



    அதன்பின்னர், ஜெர்மனி பாதுகாப்புத்துறை மந்திரி உர்சுலா வான் டெர் லியெனை நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். #NirmalaSitharaman
    ×