என் மலர்
நீங்கள் தேடியது "அலீசா ஹீலி"
- இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் அடித்து அவுட்டானார்.
- அரையிறுதி போட்டியிலும் லாரா வோல்வார்ட் சதம் அடித்திருந்தார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப்போட்டியில் கடைசி வரை தனி ஒருவனாக போராடிய தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் அடித்து அவுட்டானார். முன்னதாக அரையிறுதி போட்டியிலும் அவர் சதம் அடித்திருந்தார். மொத்தமாக இந்த தொடரில் 571 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம் மகளிர் உலக கோப்பையில் ஒரு சீசனில் அதிக (571) ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் லாரா வோல்வார்ட் படைத்தார்.
மகளிர் உலக கோப்பையில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் லாரா வோல்வார்ட்டுக்கு அடுத்த இடங்களில் அலிசா ஹீலி - 509 (2022) மற்றும் ராக்கேல் ஹெயின்ஸ் - 497 (2022) ஆகியோர் உள்ளனர்.
- இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது.
- சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
இப்போட்டியில் கொன்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி இடையேயான மோதல் பெரும் பரபரப்பை கிளப்பியது. சாம் கொன்ஸ்டாஸை இந்திய வீரர் விராட் கோலி வேண்டுமென்றே இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து விராட் கோலிக்கு ஐசிசி அபராதம் விதித்தது.
இந்நிலையில் அனுபவ வீரரான விராட் கோலி அறிமுக வீரரிடம் இதுபோல் நடந்து கொண்ட சம்பவம் கண்டனங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
இந்த நிகழ்வின் போது விராட் எங்கு நடக்கிறார் என்று பாருங்கள். விராட் வலது பக்கமாக நடந்து அந்த மோதலை ஏற்படுத்தினார். அதனால் இதில் அவர் மீது தான் தவறு என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இந்நிகழ்வு குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலீசா ஹீலி, "இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது. உங்கள் அனுபவமிக்க வீரர், நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
இது உண்மையில் ஒரு அணியின் சிறந்த செயல் அல்ல. ஆனால் இந்திய அணி அதை அணுக விரும்பும் ஒரு வழி என்றால், அப்படியே ஆகட்டும். ஆனால் அது கொன்ஸ்டாஸை சிறிதும் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
- அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது.
- மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் அவரது மனைவி அலீசா ஹீலி இருவரும் வித்தியாசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளனர்.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்திய போது சர்வதேச கிரிக்கெட் 700-வது விக்கெட்டாக அமைந்தது.
அதே வேளையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய நாட் ஷிவர் பிரண்ட் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனான அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது. நட்சத்திர கிரிக்கெட் தம்பதிகள் இருவரும் ஒரே நாளில் 287-வது போட்டியில் விளையாடியதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அலீசா ஹீலி 10 டெஸ்ட், 115 ஒருநாள், 162 டி20 போட்டிகளிலும், மிட்செல் ஸ்டார்க் 95 டெஸ்ட், 127 ஒருநாள், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






