என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் உலகக் கோப்பை"
- இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
- வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷும் ஒருவர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலிகுரியில் ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம் கட்ட உள்ளதாக அறிவித்தார்.
சில தினங்கள் முன் முதல்வர் மம்தா பானர்ஜி ரிச்சாவுக்கு மாநில காவல்துறையில் டிஎஸ்பி வேலை வழங்கியிருந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மம்தா கூறுகையில், "வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
கிரிக்கெட் பிரியர்களுக்கு அவரது பெயரில் ஒரு மைதானத்தை பரிசளிக்க விரும்புகிறோம்.
இப்போது, ரிச்சாவின் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும், வங்காள கிரிக்கெட் சங்கம் (CAB) தங்கப் பெண்ணுக்கு ரூ.34 லட்சம் நிதி வெகுமதியையும், தங்க முலாம் பூசப்பட்ட மட்டை மற்றும் பந்தையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
- மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. முடிவெடுத்துள்ளது.
துபாய்:
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதையடுத்து, ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், வரும் 2029-ம் ஆண்டு முதல் 10 அணிகள் பங்கேற்கும் வகையில் உலகக் கோப்பை விரிவுபடுத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பையில் தற்போது 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. 2029-ம் ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.
- மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- அடுத்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படுகிறது.
ஜெய்ப்பூர்:
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நஹர்கர் கோட்டையில் உள்ள ஷீஸ் மஹாலில் மெழுகு சிலை செய்து வைக்கப்படும் என அந்தக் கண்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் 2026ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஆடவர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு இங்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
- முதன்முறையாக இந்திய மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்தது.
- இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலக கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.
விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா சியாரா கார், மகளிர் உலக கோப்பை வென்ற ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மஹாகாலேஷ்வர் கோவிலில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- ஏராளமான மக்கள் கடவுளிடம் வருகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோவிலில் நடந்த பஸ்ம ஆரத்தியில் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மஹாகாலேஷ்வர் கோவிலில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். இது ஒரு அழகான ஆன்மீக இடம். ஏராளமான மக்கள் கடவுளிடம் வருகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்கிறார். இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.
உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள். இது பெண்கள் சக்தி! கோ கேர்ள்ஸ்!
இவ்வாறு அவர் கூறினார்.
- முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
- பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், இந்திய மகளிர் அணி வீராங்கனைகள். இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற உள்ளனர்.
இதற்காக டெல்லி விமான நிலையம் வந்த இந்திய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
- தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் ரூ.22.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது.
மேலும், மும்பையைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் ரூ.22.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஃபட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
- இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் ரசிகர் பாடியது இந்தியர்களை நெகிழ வைத்தது.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றதை, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், அர்ஷத் என்ற நபர் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சியை அணிந்தபடி இந்திய மகளிர் அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
அதில், இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் எழுந்து நின்று இந்திய தேசிய கீதத்தைப் பாடியது இந்திய ரசிகர்களை உண்மையிலேயே நெகிழ வைத்தது.
அர்ஷத்தின் இந்த செயல், இருநாட்டு எல்லைகளை கடந்து இதயங்களை இணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
- இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
- உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
உலகக் கோப்பையை வென்றது தொடர்பாக இந்நாள் மற்றும் முன்னாள் வீராங்கனைகள் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகக் கோப்பை வென்றது தொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி கூறியதாவது:
இந்த உலகக் கோப்பைக்கு முன் எனக்காக அதைச் செய்வதாக அவர்கள் எனக்கு உறுதியளித்தார்கள்.
2022-ம் ஆண்டு நாங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. அதன்பிறகு, ஹர்மனும் ஸ்மிருதியும் நள்ளிரவில் என் அறைக்கு வந்து, 'அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் இருப்பீர்களா என எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்காக அந்தக் கோப்பையை நாங்கள் வெல்வோம் என சொன்னார்கள். இறுதியாக, அவர்கள் அதைச் செய்தார்கள், அதனால்தான் நாங்கள் அனைவரும் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.
- மகளிர் உலக கோப்பையில் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
- கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், மகளிர் உலக கோப்பையில் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
அந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்மிருதி மந்தனா,ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய 3 இந்திய வீராங்கனைகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த அணியின் வீராங்கனைகள்:-
ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வோர்ட் (C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் காப், ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, அன்னாபெல் சதர்லேண்ட், நாடின் டி கிளார்க், சித்ரா நவாஸ் (WK), அலனா கிங், சோபி எக்லெஸ்டோன்.
- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
- ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அப்புகைப்படத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரின் டி சர்ட்டில் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு மட்டுமல்ல , அனைவருக்குமான விளையாட்டு" என்று எழுதப்பட்டுள்ளது.
முன்னதாக கால்பந்து உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி, டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் ஆகியோர் உலக கோப்பையுடன் தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
- ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்
- இந்தூரை சேர்ந்த பலாஷ் முச்சல் இசையமைப்பாளராக உள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது காதலன் பலாஷ் முச்சலுடன் உலக கோப்பை வெற்றியை கொண்டாடினார்.
ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பலாஷ் முச்சல் இசையமைப்பாளராக உள்ளார். சில ஆல்பங்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.
ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடிக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.






